📅 Friday, 25 September 2026 IST | புரட்டாசி 9, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports September 25, 2026 10:03 AM

துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு வெள்ளி.. ஐஸ்வரி, நீரஜ், ருத்ராங்க்ஷ் அசத்தல் வெற்றி

துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு வெள்ளி.. ஐஸ்வரி, நீரஜ், ருத்ராங்க்ஷ் அசத்தல் வெற்றி

துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு வெள்ளி.. ஐஸ்வரி, நீரஜ், ருத்ராங்க்ஷ் அசத்தல் வெற்றி

நகோயா: ஜப்பானில் நடைபெற்று வரும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில், துப்பாக்கி சுடுதல் களத்தில் இருந்து இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் கிடைத்துள்ளது. ஆண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன்ஸ் குழுப் பிரிவில் இந்திய அணி வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளது. முன்னதாக சுருச்சி சிங் மற்றும் கமல்ஜீத் ஜோடி கலப்பு 10 மீட்டர் ரைபிள் பிரிவில் தங்கம் வென்று இருந்தனர். அதைத் தொடர்ந்து இந்த வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது. ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர், நீரஜ் குமார் மற்றும் ருத்ராங்க்ஷ் பாட்டீல் ஆகியோர் அடங்கிய இந்திய அணி மொத்தம் 1762 புள்ளிகள் குவித்து 2-வது இடத்தைப் பிடித்தது. சீன அணி 1766 புள்ளிகளுடன் தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றியது. சீன வீரர் ஜாங் சாங்ஹாங் 593 புள்ளிகள் குவித்து புதிய ஆசிய விளையாட்டு சாதனை படைத்தார்.