📅 Thursday, 01 October 2026 IST | புரட்டாசி 15, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Health October 01, 2026 08:03 AM

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்: மன உளைச்சலால் உடல்நலம் குன்றி ஆயுதப்படை போலீஸ்காரர் உயிரிழப்பு

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்: மன உளைச்சலால் உடல்நலம் குன்றி ஆயுதப்படை போலீஸ்காரர் உயிரிழப்பு

தூத்துக்குடி,

துப்பாக்கி சூடு

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து கடந்த 2018-ம் ஆண்டு மே 22-ம் தேதி அன்று நடை பெற்ற போராட்டத்தின் 100-வது நாளையொட்டி, போராட்டக்காரர்கள் தூத்துக்குடியில் இருந்து பேரணியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குச் சென்றனர்.

மன உளைச்சலில்....

அப்போது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களுக்கு உணவு வழங்குவதற்காக சென்றவர் ஆயுதப்படைபோலீஸ்காரர் ராஜா. துப்பாக்கிச்சூடு நடைபெற்றபோது, ராஜா துப்பாக்கியை கையில் ஏந்தியபடி போலீஸ் வாகனத்தின் மீது நின்றிருந்த புகைப்படம் வெளியாகி, சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டது.

இந்தப் புகைப்படம் காரணமாக ராஜா குறித்து பல்வேறு கருத்துகள் சமூக வலைதளங்களில் பரவியதாக கூறப்படுகிறது. இதனால் அவரது மனைவி, பிள்ளைகள் மற்றும் உறவினர்கள் மத்தியில் மனவருத்தம் ஏற்பட்டதாகவும், ராஜாவும் நீண்ட நாட்களாக மன உளைச்சலில் இருந்ததாகவும் கூறப்படுறது.

சிகிச்சை பலனின்றி...

இருந்தாலும் நீண்ட நாட் களாக மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படும் போலீஸ்காரர் ராஜா, கடந்த சில நாட்களாக கடுமையான உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ராஜா உயிரிழந்தார். இறந்த போலீஸ்காரர் ராஜாவின் உடலுக்கு தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பில் காவல்துறை மரியாதையுடன் அஞ்சலி செலுத்தப்பட்டது.