📅 Tuesday, 22 September 2026 IST | புரட்டாசி 6, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports September 22, 2026 03:03 PM

டி20 கிரிக்கெட்டில் இந்தியா புதிய சாதனை.. உலக அளவில் ஒரே அணி என பெருமை.. ஆஸ்திரேலியா கூட கிடையாது

டி20 கிரிக்கெட்டில் இந்தியா புதிய சாதனை.. உலக அளவில் ஒரே அணி என பெருமை.. ஆஸ்திரேலியா கூட கிடையாது

டி20 கிரிக்கெட்டில் இந்தியா புதிய சாதனை.. உலக அளவில் ஒரே அணி என பெருமை.. ஆஸ்திரேலியா கூட கிடையாது

சானோ: சர்வதேச டி20 போட்டிகளில் 200 வெற்றிகளை பதிவு செய்த முதல் அணியாக இந்தியா வரலாறு படைத்துள்ளது. சானோ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஜப்பானுக்கு எதிரான ஒருநாள் T20I போட்டியில், மழை காரணமாக 5 ஓவர்களாக குறைக்கப்பட்ட போட்டியில் இந்தியா 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இது இந்தியாவின் 200வது T20I வெற்றியாகும் (சூப்பர் ஓவர் வெற்றிகள் உட்பட). இந்தியா-ஜப்பான் உறவுகளின் 75வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் 'ஸ்போர்ட் 75' முயற்சியின் ஒரு பகுதியாகவும், ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான பயிற்சியாகவும் இந்த போட்டி நடைபெற்றது.

டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரேயஸ் ஐயர் பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தார்.இந்தியா 5 ஓவர்களில் 32/4 ரன்கள் எடுத்தது. ஜப்பானின் ஸ்பின் பந்துவீச்சாளர்கள் சிறப்பாகச் செயல்பட்டனர். சார்லி ஹாரா-ஹின்ஸே 2/17 எடுத்தார். அபிஷேக் ஷர்மா முதல் பந்திலேயே வெளியேறினார். சஞ்சு சாம்சன் 9 ரன்கள், இஷான் கிஷன் 3 ரன்கள் எடுத்தனர்.

கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் மட்டும் 16 ரன்கள் எடுத்து அணியின் அதிகபட்ச ஸ்கோரைப் பதிவு செய்தார். ஜப்பான் 33 ரன்கள் இலக்கை 5 ஓவர்களில் துரத்தியது. ஆனால் இந்திய ஸ்பின்னர்கள் கட்டுப்படுத்தியதால் ஜப்பான் 30/3 இல் நின்றது. வாஷிங்டன் சுந்தர் 2/13 எடுத்து முக்கியப் பங்கு வகித்தார். இந்தியா 2 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணி பல்வேறு வரலாற்று மைல்கற்களை எட்டியுள்ளது. இந்திய அணி தனது முதலாவது டி20 வெற்றியை கடந்த 2006-ஆம் ஆண்டு ஜோகானஸ்பர்க் மைதானத்தில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெற்றுத் தொடங்கியது. தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி, தனது 50-வது வெற்றியை 2017-ஆம் ஆண்டில் கொழும்பு ஆர்.பி.எஸ் மைதானத்தில் இலங்கைக்கு எதிராக 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெற்றது.

அதன் தொடர்ச்சியாக, 100-வது வெற்றியை 2022-ல் கொல்கத்தாவில் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக 8 ரன்கள் வித்தியாசத்திலும், 150-வது வெற்றியை 2024-ல் க்ரோஸ் ஐலெட் மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 24 ரன்கள் வித்தியாசத்திலும் பதிவு செய்து அசத்தியது. தற்போது, சானோ மைதானத்தில் 2026-ஆம் ஆண்டு ஜப்பான் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தனது 200-வது சர்வதேச டி20 வெற்றியைப் பதிவு செய்து புதிய வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.

ஒவ்வொரு 50 வெற்றிகளையும் இந்திய அணி கடக்க எடுத்துக்கொண்ட போட்டிகளின் எண்ணிக்கை தற்போது காணலாம். தனது முதல் 50 வெற்றிகளை பெற இந்திய அணிக்கு 83 போட்டிகள் தேவைப்பட்டன. அடுத்தடுத்த வெற்றிகள் மிகக் குறைந்த போட்டிகளிலேயே சாத்தியமாகின. அதன்படி, 51 முதல் 100 வெற்றிகளைப் பெற 72 போட்டிகளும், 101 முதல் 150 வெற்றிகளைப் பெற 70 போட்டிகளும் தேவைப்பட்டது. 151 முதல் 200 வரையிலான வெற்றிகளை வெறும் 66 போட்டிகளிலேயே இந்திய அணி அதிவேகமாக எட்டி அசத்தியுள்ளது.

தற்போது இந்திய அணி ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்குத் தயாராகும் நோக்கில் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. இந்தச் சூழலில் நடைபெற்ற இப்போட்டியில், ஜப்பான் அணியும் இந்திய அணிக்கு எதிராக மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி கடுமையான சவாலை அளித்தது விளையாட்டு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.