ட்விஸ்ட் அடித்த தங்கம்! மீண்டும் உயர்ந்த விலை!
ட்விஸ்ட் அடித்த தங்கம்! மீண்டும் உயர்ந்த விலை!
தங்கம் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வரும் நிலையில், இன்று மாலை மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது. காலையில் விலை குறைந்த நிலையில், மாலையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை கணிசமாக உயர்ந்துள்ளது.
தங்கம் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வரும் நிலையில், இன்று மாலை மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது. காலையில் விலை குறைந்த நிலையில், மாலையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை கணிசமாக உயர்ந்திருப்பது நகை வாங்க திட்டமிட்டுள்ளவர்களிடையே கவனம் பெற்றுள்ளது.
நேற்று ஒரே நாளில் தங்கம் விலை இரண்டு முறை குறைந்தது. நேற்று காலை சவரனுக்கு ரூ.560 குறைந்த நிலையில், பிற்பகலில் மீண்டும் சவரனுக்கு "ரூ.1,720 குறைந்தது. இதனால் நேற்று மாலை ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.1,17,800-க்கு" விற்பனை செய்யப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக இன்று காலையிலும் தங்கம் விலை குறைந்தது. இன்று காலை சவரனுக்கு ரூ.600-ம், கிராமுக்கு "ரூ.75-ம் குறைந்ததால், ஒரு சவரன் ரூ.1,17,200-க்கும், ஒரு கிராம் ரூ.14,650-க்கும்" விற்பனை செய்யப்பட்டது.
மாலையில் திடீர் உயர்வு:
இந்நிலையில், இன்று மாலை தங்கம் விலை திடீரென உயர்ந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு "ரூ.1,200 உயர்ந்துள்ளது. இதனால் ஒரு சவரன் தங்கம் தற்போது ரூ.1,18,400-க்கு" விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அதேபோல், ஒரு கிராம் தங்கத்தின் விலை "ரூ.150 உயர்ந்து ரூ.14,800-க்கு" விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஒரே நாளில் காலையில் குறைந்து, மாலையில் மீண்டும் உயர்ந்துள்ள தங்கம் விலை நகை வாங்குவோர் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.
வெள்ளி விலையும் உயர்வு:
தங்கத்தைப் போலவே வெள்ளி விலையிலும் இன்று மாற்றம் ஏற்பட்டுள்ளது. இன்று காலை வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.260-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், இன்று மாலை வெள்ளி விலை மீண்டும் உயர்ந்துள்ளது. கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.265-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.5,000 உயர்ந்து ரூ.2 லட்சத்து 65 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தங்கம் மற்றும் வெள்ளி விலையில் ஒரே நாளில் ஏற்பட்டுள்ள இந்த ஏற்ற, இறக்கங்கள் நகை வாங்கும் பொதுமக்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.