TVK Kanimozhi: ”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
TVK Kanimozhi: ”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
TVK Kanimozhi: திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி சோமு, தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேசியது சமூக வலைதளங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
TVK Kanimozhi: அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை, நண்பனும் இல்லை என, பாஜக கூட்டணி தொடர்பான கேள்விக்கு திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பதிலளித்துள்ளார்.
தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேசிய திமுக எம்.பி.,
சென்னையில் திமுக சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி சோமுவிடம், முதலமைச்சர் விஜய் தலைமையிலான அனைத்து கட்சி எம்.பிக்கள் கூட்டத்தில் பங்கேற்காதது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளிக்கையில், “ தமிழ்நாட்டில் தற்போது நடைபெற்று வரும் அரசாங்கத்திற்கு அரசின் நிலைப்பாடு, அரசு எப்படி செயல்பட வேண்டும், அரசாங்கத்தை எப்படி நடத்த வேண்டும் என எதுவுமே தெரியாது. அவர்கள் மிகவும் புதியவர்கள். அவர்கள் குழந்தைகளை போன்றவர்கள். மாநிலத்தை ஏற்கனவே ஆண்டவர்களிடமிருந்து அறிவுறைகளை பெற வேண்டும். திராவிட இயக்கங்கள் தான் நீண்ட காலம் ஆண்டு, தமிழ்நாட்டிற்கு பல நல்லதை செய்துள்ளன. எனவே, முந்தைய ஆட்சியாளர்களுக்கு எதுவும் தெரியாது என எளிதில் சொல்ல முடியாது. மாட்டு தொழுவத்தில் நாய் என்பதை போன்று இந்த அரசாங்கத்தை கொண்டு என்ன செய்ய வேண்டும் என்றே தெரியவில்லை.
அதிர்ஷ்டம் காரணமாகவே ஆட்சி
முழுமையான அதிர்ஷ்டம் அல்லது சமூக வலைதளங்கள் பரப்புரை வாயிலாக மட்டுமேஅவர்கள் ஆட்சிக்கு வந்துள்ளனர். மக்களுக்கு என்ன செய்ய வேண்டும் என அவர்களுக்கு தெரியவில்லை. ஸ்டாலின் தலைமையிலான திமுக போன்ற பெரிய திராவிட இயக்கங்கள் தான், மக்களுக்காக பணியாற்றி மக்களுடன் களத்தில் இருந்தோம். ஆட்சியில் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் நாங்கள் தமிழக மக்களுக்காகவே இயங்குகிறோம். எனவே எது வேண்டும் என எங்களுக்கு தெரியும். எனவே பெயரளவில் அழைக்கப்பட்ட கூட்டங்களுக்கு எல்லாம் நாங்கள் செல்லமாட்டோம். தமிழ்நாட்டிற்காக தொகுதி மறுவரையறை தொடர்பாக மத்திய அரசுடன் முதலமைச்சர் பேசி அதிக இடங்களை வாங்க வேண்டும். ஆனால் அவர் அதை செய்வதாக தெரியவில்லை. ஆனால், எங்கள் முதலைச்சர் பேசமாட்டார் என சில அமைச்சர்கள் சொல்வதையும் நான் பார்க்கிறேன். தமிழ்நாடு மக்களுடன் அவர் இப்படி விளையாட கூடாது” என கனிமொழி சோமு பதிலளித்தார்.
Chennai, Tamil Nadu: DMK Leader Kanimozhi NVN Somu says, "Let me be very good make it very clear the current government what is running in Tamil Nadu Doesn't know anything about the government standards or the standing operating positions of how government should be running They… pic.twitter.com/W9FouFrP02
பாஜகவுடன் திமுக கூட்டணியா?
பாஜகவுடன் கூட்டணி அமைக்க திமுக முயல்கிறதா? தொகுதி மறுவரையறை மசோதாவை ஆதரிக்குமா? என்ற கேள்விக்கு பதிலளிக்கையில், “அரசியலில் நிரந்தர எதிரி அல்லது நண்பர் என்று யாரையும் கூற முடியாது. தமிழ்நாட்டுக்கு எது நல்லதோ, அது எந்த தரப்பிலிருந்து வந்தாலும் திமுக அதை ஆதரிக்கும். தொகுதி மறுவரையறையில் தமிழ்நாட்டுக்குக் கிடைக்கக்கூடிய அதிகபட்ச நாடாளுமன்ற இடங்களைப் பெறுவதற்கான நிலைப்பாட்டில் திமுக உறுதியாக இருக்கும்” என கனிமொழி சோமு பதிலளித்துள்ளார். இதனால் கூடுதல் தொகுதிகள் என்ற அம்சத்தை ஏற்று, தொகுதி மறுவரையறை மசோதாவை திமுக நாடாளுமன்றத்தில் ஆதரிக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. முன்னதாக முதலமைச்சர் விஜய் தலைமையில் நேற்று நடைபெற்ற அனைத்து கட்சி எம்.பிக்களின் ஆலோசனைக் கூட்டத்தில், கூடுதல் தொகுதிகள் என்ற ஆசை வார்த்தையில் தமிழ்நாடு அரசியல் கட்சிகள் மயங்கக் கூடாது என வலியுறுத்தப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.
தலைப்பு செய்திகள்
ஃபோட்டோ கேலரி