📅 Monday, 17 August 2026 IST | ஆவணி 1, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business July 21, 2026 09:34 AM

உச்ச குருவுடன் இணையும் சூரியன் 6 ராசிகளுக்குக் காத்திருக்கும் அதிர்ஷ்ட யோகங்கள்!

உச்ச குருவுடன் இணையும் சூரியன் 6 ராசிகளுக்குக் காத்திருக்கும் அதிர்ஷ்ட யோகங்கள்!

உச்ச குருவுடன் இணையும் சூரியன் 6 ராசிகளுக்குக் காத்திருக்கும் அதிர்ஷ்ட யோகங்கள்!

இந்த இணைவால் மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், மீனம் ஆகிய 6 ராசிகளுக்கு நிகழ வாய்ப்புள்ள மாற்றங்கள், அவர்கள் செய்யவேண்டிய வழிபாடுகள் குறித்து அறிந்துகொள்வோம்.

ஜூலை மாதம் 17-ம் தேதி ஆடி முதல் நாள் தட்சிணாயன புண்ணிய காலம் தொடங்குகிறது. தென் திசை நோக்கி பயணிக்கத் தொடங்குவார் சூரியன். அன்றைய தினம் கடகத்தில் பிரவேசிப்பார் சூரியன். ஏற்கெனவே கடத்தில் பூரண சுபரான குருபகவான் உச்சம் பெற்று அமர்ந்திருக்கிறார்.

கோசாரப்படி சில கிரகங்களின் சேர்க்கை குறிப்பிட்ட ராசிகளுக்கு அபரிமிதமான பலன்களைக் கொடுக்கும். அந்த வகையில் கடகத்தில் சூரியன் மற்றும் உச்ச குருவின் சேர்க்கையால் மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், மீனம் மற்றும் மீன ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கைகூட வாய்ப்புகள் உண்டு. இந்த இணைவால் குறிப்பிட்ட 6 ராசிகளுக்கு நிகழ வாய்ப்புள்ள மாற்றங்கள், அவர்கள் செய்யவேண்டிய வழி பாடுகள் குறித்து அறிந்துகொள்வோம்.

பொதுவாக மேஷ ராசியில் பிறந்த அன்பர்கள் சிங்கம் போன்று கம்பீரமும் ஆளுமை மிகுந்தவர்களாகவும் இருப்பார்கள். பூமிகாரகனாகிய செவ்வாயின் ராசியில் பிறந்தவர்கள் என்பதால், சொந்த நிலம் வாங்கும் யோகம் உண்டு. உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டுக்கும் சுக்கிரன் அதிபதி. ஆகவே, கலைகளில் நாட்டம் இருக்கும். பழைமை விரும்பிகளாகவும் திகழ்வீர்கள்.

ஜூலை 17-ம் முதல் உங்கள் ராசிக்கு 4-ம் இடத்தில் பிரவேசிக்கிறார் சூரியபகவான். உங்கள் ராசிக்கு அர்த்தாஷ்டமத்தில் அமர்ந் துள்ள குருவுடன் இணைந்து பலன் தரப்போகிறார். இதன் பலனாக குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கலாம். வீடு வாங்குதல், வீடு கட்டுதல், புதுப்பித்தல் போன்ற முயற்சிகள் பலன் தரும். தாயாரின் உடல்நிலையில் முன்னேற்றம், அவரால் ஆதாயம் கிடைக்க வாய்ப்பு உண்டு. இந்த ராசியைச் சேர்ந்த மாணவர்களுக்கு படிப்பில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். சொத்துச் சேர்க்கை உண்டாக லாம். சிலருக்கு அரசு சார்ந்த வேலைகள், நிர்வாகப் பொறுப்புகள், புதிய பதவிகள் தேடி வரும். மனதில் தன்னம்பிக்கை பிறக்கும்.

மேஷ ராசிக்கு குரு 9-ஆம் மற்றும் 12-ஆம் இட அதிபதி. உச்சம் பெற்ற குருவுடன் சூரியன் இணையும் இந்தக் காலத்தில் குருவின் சஞ்சாரம் அதிர்ஷ்டத்தை உயர்த்தும். ஆன்மிகப் பயணங்கள், மகான்களின் ஆசிகள் கிட்டைக்கும். வெளிநாட்டு தொடர்புகள் அல்லது தொலைதூர வாய்ப்புகளால் நன்மை ஏற்படலாம். எனினும் குடும்பத்தில் சூடான விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. செவ்வாய்க் கிழமைகளில் வேல்மாறல் பாராயணம் படித்து, முருகப்பெருமானை வழிபடுவதால் புகழ், பதவியோகம், சொத்துச் சேர்க்கைகள் உண்டாகும். நினைத்த காரியம் கைகூடும்.

ரிஷப ராசியில் பிறந்த உங்களை எதிர்த்து வெல்வது கடினம். எதிரிக்கு எப்போதும் சவாலாகவே இருப்பீர்கள். ஆனாலும், நீங்கள் இயல்பிலேயே சாதுவாகத்தான் இருப்பீர்கள். மற்றவர்களுக்கு உதாரண புருஷராகத் திகழ்வீர்கள். பொதுக் காரியங்களிலும் மிகுந்த ஈடுபாடு இருக்கும். எல்லா வேலைகளையும் முன் நின்று செய்வீர்கள். சூரியனும் குருவும் இணைந்திருக்கும் ஆடி மாதத்தில் பேச்சுத்திறன் உங்களுக்கு மிகப்பெரிய பலமாக அமையும். நீங்கள் பேசும் வார்த்தைகளுக்கு மதிப்பும் மரியாதையும் கிடைக்கும். முக்கிய ஒப்பந்தங்கள் வெற்றிகரமாக நிறைவேறும். சகோதரர்கள், நண்பர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.

புதிய தொழில் அல்லது வியாபார முயற்சிகளை தொடங்க இது நல்ல காலமாக இருக்கும். நீங்கள் தைரியமாக எடுக்கும் முடிவுகள் வெற்றியைத் தரும். குறுகிய தூரப் பயணங்கள் லாபகரமாக அமையும். புதிய தொடர்புகள் எதிர்கால முன்னேற்றத்திற்கு உதவும். தன்னம்பிக்கை மற்றும் செயல்திறன் அதிகரிக்கும். உங்கள் திறமையை மற்றவர்கள் பாராட்டும் சூழல் உருவாகும்.

நீங்கள் வெள்ளிக்கிழமைகளில் அருகிலிருக் கும் பெருமாள் கோயில்களுக்குச் சென்று தாயாருக்குத் தாமரைப் பூ மாலை சாற்றி வழிபட்டு வாருங்கள். வீட்டில் மகாலட்சுமி தேவிக்கு நெய்தீபம் ஏற்றிவைத்து கனகதாரா ஸ்தோத்திரம் படித்து வழிபடுவது விசேஷம். இதனால் இதுவரை இருந்துவந்த தடைகள் நீங்கும்; அடகு நகைகளை மீட்கும் அளவுக்குப் பணவரவு உண்டாகும். கடன்களில் ஒருபாதி அடைபடும்.

கடக ராசிக்காரர்கள், எந்தத் துறையில் பிரவேசித்தாலும், அங்கே உங்கள் அதிகாரத் தையும் ஆளுமையையும் நிலைநிறுத்துவீர்கள். மற்றவர்களை உங்கள் கருத்துக்குக் கட்டுப்பட வைப்பதில் வல்லவர் நீங்கள். உங்கள் ராசி நாதன் சந்திரன் மனோகாரகர் ஆவார். நீங்கள் வெகுவிரைவில் மற்றவர் மனதில் இடம் பிடித்து விடுவீர்கள். உங்கள் ராசியில் ஏற்கெனவே ஜென்மகுருவாக உச்சம் பெற்று அமர்ந்திருக்கிறார் குரு பகவான். ஆடி முதல் நாளன்று உங்கள் ராசியில் ஆத்மகாரகரான சூரியதேவனும் பிரவேசிக்கப் போகிறார். ஆக, இந்தக் காலம் உங்களுக்கு முக்கியமான மாற்றங்களைக் கொடுக்கக்கூடியதாகக் கருதப் படுகிறது. குரு கடகத்தில் உச்சம் பெறும் கிரகம் என்பதால், சூரியனுடன் சேரும்போது பல நல்ல வாய்ப்புகள் உருவாகலாம். அதே நேரத்தில் சூரியனின் தீவிர குணத்தால் சில சவால்களும் இருக்கலாம்.

தனிப்பட்ட செல்வாக்கு, மதிப்பு மற்றும் கௌரவம் உயரும். புதிய முயற்சிகளைத் தொடங்க நல்ல தன்னம்பிக்கை கிடைக்கும். வேலை அல்லது தொழிலில் பதவி உயர்வு, பொறுப்புகள் அதிகரித்தல் போன்ற வாய்ப்பு கள் உருவாகலாம். அரசு, அதிகாரிகள் அல்லது உயர் பதவியில் உள்ளவர்களின் ஆதரவு கிடைக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு நல்ல வரன் அமையும் வாய்ப்பு ஏற்படலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி, சுபகாரியங்கள் நடைபெற வாய்ப்பு உண்டு. உடல்நிலையில் முன்னேற்றம், மன உறுதி மற்றும் ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும். ஜூலை 17 முதல் ஆகஸ்ட் 15 வரையிலும் வருமானம் அதிகரிக் கும் வாய்ப்பு உண்டு. முதலீடுகள், சொத்து தொடர்பான முயற்சிகளில் முன்னேற்றம் கிடைக்கும். எனினும் தேவையற்ற செலவு களைத் தவிர்ப்பது நல்லது.

ஞாயிற்றுக் கிழமைகளிலும், ஆடி வெள்ளி யிலும், பெளர்ணமி தினத்திலும், வீட்டில் விளக்கேற்றிவைத்து அபிராமிஅந்தாதி பாராயணம் செய்வது மிகவும் சிறப்பு. அம்மன் கோயில்களில் கூழ் வார்க்க இயன்ற பங்களிப்பை வழங்கலாம். வீட்டில் அம்பாளுக்கு சித்ரான்னங்கள் படைத்து வழிபடுவதுடன், ஏழைகளுக்கு விநியோகிப் பதால், நீங்கள் நினைத்தது நடக்கும்; தொட்ட காரியங்களில் வெற்றி உண்டாகும்.

இந்த ராசியினர் பெரும்பாலும் பொறுமை சாலிகளாகத் திகழ்வார்கள். கோபம் வந்தாலும் வந்த வேகத்தில் காணாமல் போய்விடும். இவர்களின் வாக்கு ஸ்தானத்துக்கு சுக்கிரன் அதிபதி என்பதால், உற்சாகமாகப் பேசுவீர்கள். உங்களுடைய ஆறுதலான சில வார்த்தைகள், மற்றவர்களின் வாழ்க்கையில் நல்ல திருப்பத்தை ஏற்படுத்தும்.

உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் சூரிய தேவனும் குருவும் இணைகிறார்கள். இந்த காலத்தில் வருமானம் அதிகரித்து பொருளாதார நிலை வலுப்பெறும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். சேமிப்பு அதிகரிக்கும் வாய்ப்பும் உள்ளது.

வியாபாரத்தில் புதிய தொடர்புகள் உருவாகும். முக்கியமான நபர்களின் அறிமுகம் எதிர்கால வளர்ச்சிக்கு வழிவகுக்கும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். முதலீடுகள், வியாபார விரிவாக்கம் மற்றும் புதிய திட்டங்கள் நல்ல லாபத்தைத் தரும்.

உங்கள் ஆசைகள் மற்றும் இலக்குகள் ஒவ்வொன்றாக நிறைவேறத் தொடங்கும். நீண்ட காலமாக எதிர்பார்த்த நல்ல செய்திகள் கிடைக்கும். மனதில் மகிழ்ச்சி யும் திருப்தியும் அதிகரிக்கும். நண்பர்கள் மற்றும் செல்வாக்கு மிக்கவர்களின் ஆதரவு கிடைக்கும். அவர்களால் பல முக்கிய காரியங்கள் எளிதாக நிறைவேறும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும்.

இவர்கள் ஒருமுறை குடும்பத்துடன் திருவெண்காடு சென்று, புதன் பகவானை வழிபட்டு வரலாம். இயலாதவர்கள், அருகிலுள்ள சிவாலயத்தில் நவகிரக சந்நிதியில் அருளும் புதனுக்குத் தீபம் ஏற்றி வழிபடலாம்.

சனிக் கிழமைகளில் ஆஞ்சநேயருக்கு வடை மாலை சாற்றி வழிபடுங்கள்; உங்கள் கஷ்டங்கள் மனத் தடைகள் எல்லாம் நீங்கும்; எதிர்பாராத தனவரவு உங்களை வாழ்வின் அடுத்த நிலைக்கு உயர்த்தும்.

எல்லோரிடமும் கவனமாகப் பழகும் அன்பர்கள் இந்த ராசிக்காரர்கள். அதேநேரம் எல்லாவிதமான சவால்களையும் எதிர்கொள்ளத் துணிந்தவர்கள். அதேபோல், பிறர் மனதில் இருக்கும் எண்ணங்களை நொடியில் கண்டுபிடிக்கும் திறமை இவர்களுக் கான வரப்பிரசாதம் எனலாம். இவர்கள் சாமர்த்தியசாலிகள். ரகசியம் காப்பவர். அதேநேரம், தேவையான வேளையில் ரகசிய விஷயங்களை வெளிப்படுத்தவும் தயங்க மாட்டார்கள். ஜூலை 17 முதல் கடகத்தில் பிரவேசிக்கிறார் சூரியபகவான். இந்த ராசிக்கு பாக்கிய ஸ்தானத்தில் உச்சம்பெற்று அமர்ந்திருக்கும் குருவுடன் சூரியன் இணைந்து சஞ்சரிக்கும் இந்தக் காலகட்டத்தில், இவர்களுக்கு அதிர்ஷ்டம் முழுமையாக துணை நிற்கும் எனலாம்.

நீண்ட நாட்களாக தடைப்பட்டிருந்த காரியங்கள் சுலபமாக நிறைவேறும். புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். உயர்கல்வி, போட்டித் தேர்வு மற்றும் வெளிநாட்டு தொடர்பான முயற்சிகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். மாணவர்கள் சிறப்பான முன்னேற்றத்தை அடைவார்கள்.

எதிர்கால வளர்ச்சிக்கான நல்ல வாய்ப்புகள் அமையும். வேலை மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். பதவி- சம்பள உயர்வு அல்லது புதிய பொறுப்புகள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. அதிகாரிகளின் பாராட்டை யும் பெறுவீர்கள். நீண்டதூரப் பயணங்கள் மற்றும் ஆன்மிகப் பயணங்கள் நன்மை தரும். கோயில் தரிசனம், குரு அருள் மற்றும் தெய்வ அனுக்கிரகம் அதிகரிக்கும்.

மனதில் நம்பிக்கையும் உற்சாகமும் வளரும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். உறவினர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். நல்ல செய்திகள் மற்றும் சுப நிகழ்ச்சிகள் வீட்டில் நடைபெற வாய்ப்பு உள்ளது.

செவ்வாய்க்கிழமைகளில் துர்கை சந்நிதியில் எலுமிச்சை தீபம் ஏற்றி வழிபடுங்கள். முருகப்பெருமானுக்கு சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு விநியோகியுங்கள். இயன்றால் வீட்டில் வாரம் ஒருமுறையேனும் குடும்பத்துடன் சேர்ந்து திருப்புகழ் பாடல்களைப் பாடி வழிபடுங்கள்; நீங்கள் எதிர்பார்த்த சுபகாரியம் விரைவில் நடக்கும்; புதிய முயற்சிகளில் வெற்றி உண்டாகும். சொத்துப் பிரச்னைகள் விலகும்.

தனகாரகனான குருவின் ராசியில் பிறந்தவர் நீங்கள். ‘பணத்தை விட மனம்தான் பெரிது’ என்று வாழ்வீர்கள். உங்களை யாரேனும் அலட்சியப்படுத்தினால், அவர்கள் ஆயுள் முழுவதும் ஒதுக்கி வைத்துவிடுவீர்கள். அந்த அளவுக்கு வைராக்கியம் கொண்டவர்கள் நீங்கள்.

அதேநேரம், சூழல் அறிந்து பேசுவதில் வல்லவர் நீங்கள். எதிலும் திட்டமிட்டுச் செயல்படுவீர்கள். பேச்சின் மூலம் சம்பாதிக்கும் வாய்ப்புகள் அதிகம். நீண்ட ஆயுள் கொண்டவர் நீங்கள். உங்கள் ராசியாதிபதியான குருபகவான், ராசிக்கு 5-ம் இடத்தில் உச்சம் பெற்றிருப்பதால், நற்பலன்கள் வாய்க்கும் என்கின்றன ஜோதிட நூல்கள்.

உச்ச குருவுடன் சூரியனும் இணைகிறார். இந்தக் காலகட்டத்தில் குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். கணவன்-மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் குறையும். வீட்டில் சுபகாரியங்கள் நடைபெற வாய்ப்பு உள்ளது.

தொழில் மற்றும் வியாபாரத்தில் நிலையான வளர்ச்சி ஏற்படும். புதிய வாடிக்கையாளர்கள் அதிகரிப்பார்கள். நல்ல வருமானம் கிடைக்கும்; எதிர்பார்த்த லாபம் அதிகரிக்கும்.

மேலும் இதுவரையிலும் இருந்த மன அழுத்தம் குறைந்து தன்னம்பிக்கை அதிகரிக்கும். உடல்நலம் மேம்பட்டு சுறுசுறுப் பாகச் செயல்படுவீர்கள். புதிய இலக்குகளை நோக்கி தைரியமாக முன்னேறுவீர்கள்.

வீடு, நிலம் அல்லது வாகனம் வாங்கும் எண்ணம் நிறைவேறலாம். சொத்து தொடர்பான பிரச்னைகள் சாதகமாக முடிவடையும். முதலீடுகளும் நல்ல பலன் தரும். தாயார் மற்றும் தாய்வழி உறவினர் களால் நன்மை கிடைக்கும். குடும்ப உறுப்பினர் களின் ஆதரவு உண்டு. வீட்டில் அமைதியான சூழல் உருவாகும்.

நீங்கள் பிரதோஷ வழிபாட்டில் கலந்து கொண்டு சிவதரிசனம் பெற்று வாருங்கள். அபிஷேகத் திரவியங்கள் வாங்கிக்கொடுப்பது மிகவும் விசேஷம். தெய்வ அருளால் பொன் - ஆபரணங்கள் சேரும் யோகம் உண்டாகும்; பிள்ளைகளின் கல்வி சார்ந்த விஷயங்கள் சாதகமாகும். சொத்துப் பிரச்னைகளில் நல்ல தீர்வு கிடைக்கும்; புதிய பொறுப்புகள் தேடி வரும்.