📅 Wednesday, 29 July 2026 IST | ஆடி 13, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics July 28, 2026 06:33 AM

Udhayanidhi Vs TVK Govt.: “நாங்க மிசாவையே பாத்தவங்க, இந்த கைதுக்கெல்லாம் அஞ்ச மாட்டோம்“

Udhayanidhi Vs TVK Govt.: “நாங்க மிசாவையே பாத்தவங்க, இந்த கைதுக்கெல்லாம் அஞ்ச மாட்டோம்“

Udhayanidhi Vs TVK Govt.: “நாங்க மிசாவையே பாத்தவங்க, இந்த கைதுக்கெல்லாம் அஞ்ச மாட்டோம்“ - தவெக அரசுக்கு உதயநிதி பதிலடி

பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ள விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனை நேரில் சந்தித்த உதயநிதி ஸ்டாலின், அது குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அவர் என்ன கூறியுள்ளார் என்பதை பார்க்கலாம்.

தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ள விளாத்திகுளம் எம்எல்ஏ மார்கண்டேயனை நேரில் சந்தித்தார். பின்னர் அது குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அவர், மிசாவையே பார்த்தது திமுக என்றும், பழிவாங்கும் படலமாக நடக்கும் கைதுகளுக்கு எல்லாம் அஞ்சாது என்றும் கூறியுள்ளார். அவரது பதிவு குறித்து முழுமையாக பார்க்கலாம்.

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் பதிவு

தனது சந்திப்பு குறித்தும், கைது நடவடிக்கை குறித்தும் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள உதயநிதி ஸ்டாலின், “சர்வாதிகார சோஃபா மாடல் அரசால் பழிவாங்கும் நோக்கத்தில் கைது செய்யப்பட்டுள்ள கழக சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் மார்க்கண்டேயன் அவர்களை பாளையங்கோட்டை மத்திய சிறையில் இன்று சந்தித்தோம்.

சிறையில் இருந்தாலும் முன்பை விட இன்னும் வேகமாக கழகப்பணி - மக்கள் பணியாற்றிடும் உத்வேகத்துடன் உள்ள அண்ணன் மார்க்கண்டேயன் அவர்களிடம் நலம் விசாரித்தோம். அவரின் விடுதலைக்காக கழகத்தலைவர் ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, கழக வழக்கறிஞர்கள் மேற்கொண்டு வரும் சட்ட நடவடிக்கைகளை எடுத்துக்கூறி ஆறுதல் தெரிவித்தோம்.

மிசா - எமர்ஜன்சியை பார்த்தது தி.மு.கழகம். தத்தித்தாவி ஆட்சிக்கு வந்து தறிகெட்டு அரசு நடத்தும் சோஃபா அரசின் கைது நடவடிக்கைகளுக்கு எல்லாம் கழகத்தின் கடைக்கோடி தொண்டர்கள் கூட அஞ்ச மாட்டார்கள். விமர்சனத்துக்காக செய்யப்படும் ஒவ்வொரு கைதின்போதும் நீதிமன்றத்திடம் குட்டுப்படும் இந்த ஆட்சியாளர்கள், மக்கள் மன்றத்திலும் சரிவைச் சந்திப்பது உறுதி.“ என தெரிவித்துள்ளார்.

சர்வாதிகார #SofaModel அரசால் பழிவாங்கும் நோக்கத்தில் கைது செய்யப்பட்டுள்ள கழக சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் மார்க்கண்டேயன் அவர்களை பாளையங்கோட்டை மத்திய சிறையில் இன்று சந்தித்தோம். சிறையில் இருந்தாலும் முன்பை விட இன்னும் வேகமாக கழகப்பணி - மக்கள் பணியாற்றிடும் உத்வேகத்துடன் உள்ள… pic.twitter.com/LtkXq1Z47G

மார்க்கண்டேயன் கைது

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தொகுதி திமுக எம்எல்ஏ-வான கார்க்கண்டேயன், கோவில்பட்டியில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டம் ஒன்றில் பேசியபோது, முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாகவும், அவருக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசினார்.

இதைத் தொடர்ந்து, கடந்த 21-ம் தேதி, திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனை காவல்துறையினர் கைது செய்தனர். இதையடுத்து, கைதான மார்க்கண்டேயன் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும், அவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து, திருநெல்வேலி பாளையங்கோட்டையில் உள்ள சிறையில் மார்க்கண்டேயன் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், இன்று பாளையங்கோட்டை சென்று அவரை நேரில் சந்தித்த உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் அது குறித்து பதிவிட்டுள்ளார்.

தலைப்பு செய்திகள்

ஃபோட்டோ கேலரி