உலக சாதனை.. எந்த பேட்ஸ்மேனும் செய்யாததை செய்து காட்டிய பாபர் அசாம்.. மூன்று வடிவ கிரிக்கெட்டில் 4500
உலக சாதனை.. எந்த பேட்ஸ்மேனும் செய்யாததை செய்து காட்டிய பாபர் அசாம்.. மூன்று வடிவ கிரிக்கெட்டில் 4500
டாரூபா: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆடிய போது பாகிஸ்தான் டெஸ்ட் கேப்டன் பாபர் அசாம் 4500 டெஸ்ட் ரன்களைக் கடந்தார். அதன் மூலம், உலகில் வேறு எந்த பேட்ஸ்மேனும் செய்யாத பிரம்மாண்ட உலக சாதனையை செய்தார்.
டாரூபாவில் உள்ள பிரையன் லாரா கிரிக்கெட் அகாடமியில் நடைபெற்று வரும் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பாபர் அசாம் இந்தச் சாதனையை செய்தார். இந்தப் போட்டிக்கு முன்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் 4500 ரன்களைக் கடக்க அவருக்கு 19 ரன்கள் தேவைப்பட்டது. நிதானமாக ஆடிய அவர் 38 பந்துகளில் 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இதன்மூலம் டெஸ்டில் தனது 4500 ரன்களைக் கடந்த அவர், சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய மூன்று பிரிவுகளிலும் தலா 4500 ரன்களுக்கு மேல் குவித்த முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.
தற்போது வரை பாபர் அசாம் டெஸ்ட் போட்டிகளில் 4,504 ரன்களும், ஒருநாள் போட்டிகளில் 6,626 ரன்களும், சர்வதேச டி20 போட்டிகளில் 4,596 ரன்களும் குவித்துள்ளார். மேலும், டெஸ்ட் கிரிக்கெட்டில் 4500 ரன்களைக் கடந்த 10வது பாகிஸ்தான் வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றார். தனது 63வது டெஸ்ட் போட்டியின் 115வது இன்னிங்ஸில் அவர் இந்த மைல்கல்லை எட்டியுள்ளார். டெஸ்டில் அவரது சராசரி 42.49 ஆகும். இதில் 9 சதங்கள் மற்றும் 31 அரைசதங்கள் அடங்கும்.
பாகிஸ்தான் அணியின் கேப்டனாக 21 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள பாபர் அசாம், 50 என்ற சராசரியுடன் 4 சதங்கள் உட்பட 1,750 ரன்கள் எடுத்துள்ளார். இந்தப் போட்டியில் 23 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜெய்டன் சீல்ஸ் பந்துவீச்சில் அவர் ஆட்டமிழந்தார். இந்தப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் வெஸ்ட் இண்டீஸ் அணி 311 ரன்கள் குவித்த நிலையில், பாகிஸ்தான் அணி 282 ரன்கள் எடுத்தது.