📅 Monday, 21 September 2026 IST | புரட்டாசி 5, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema September 21, 2026 12:02 PM

வெள்ளி வென்ற தமிழக வீராங்கனை இளவேனிலுக்கு வாழ்த்து சொல்லாத முதல்வர் ஜோசப் விஜய்.. கிளம்பும் சர்ச்சை

வெள்ளி வென்ற தமிழக வீராங்கனை இளவேனிலுக்கு வாழ்த்து சொல்லாத முதல்வர் ஜோசப் விஜய்.. கிளம்பும் சர்ச்சை

வெள்ளி வென்ற தமிழக வீராங்கனை இளவேனிலுக்கு வாழ்த்து சொல்லாத முதல்வர் ஜோசப் விஜய்.. கிளம்பும் சர்ச்சை

நகோயா: ஜப்பானில் நடைபெற்று வரும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில், துப்பாக்கி சுடுதலில் 2 வெள்ளிப் பதக்கங்களை வென்று தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். இவருக்கு ஆளுநர், விளையாட்டுத்துறை அமைச்சர் மற்றும் அரசுத் துறை வாழ்த்து தெரிவித்த நிலையில், தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் எந்த வாழ்த்துச் செய்தியும் வெளியாகாதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இளவேனில் வாலறிவனின் சாதனையைப் பாராட்டி தமிழக பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார். "இளவேனிலின் கடின உழைப்பும் அசாத்திய திறமையும் தமிழகத்திற்கும் இந்திய நாட்டிற்கும் மிகப்பெரிய பெருமை சேர்த்துள்ளது. வளரும் இளம் விளையாட்டு வீரர்களுக்கு இது மிகப்பெரிய உத்வேகம்" என்று அவர் புகழ்ந்துள்ளார்.

அதேபோல், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வெளியிட்டுள்ள பதிவில், ஒரே நாளில் 2 வெள்ளிப் பதக்கங்களை வென்று இளவேனில் தமிழக இளைஞர்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்கிறார் எனப் பாராட்டியுள்ளார். தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறையும் இளவேனில் வாலறிவனுக்கும், சர்வதேச மோட்டார் பந்தயத்தில் சாதித்த வீராங்கனை ஜெகதீஸ்ரீ குமரேசனுக்கும் சமூக வலைதளங்களில் வாழ்த்துப் பதிவுகளை வெளியிட்டது.

ஆனால், சர்வதேச அரங்கில் சாதித்த தமிழக வீராங்கனைக்கு, தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் இருந்து ஒரு வாழ்த்துப் பதிவு கூட வரவில்லை. அமைச்சரும், அரசுத் துறைகளும் வாழ்த்து மழை பொழிந்த நிலையில், முதல்வரின் பக்கத்தில் இருந்து வாழ்த்து செய்தி வராதது ஏன் என விளையாட்டு ஆர்வலர்கள் மற்றும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

தற்போது குஜராத்தில் வசித்து வந்தாலும் இளவேனில் தமிழ்நாட்டை சேர்ந்தவர், கடலூரில் பிறந்தவர் என்பதால் தான் ஆளுநர் முதல் தமிழக அமைச்சர் வரை பாராட்டி உள்ளனர். பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் குழுப் பிரிவு மற்றும் தனிநபர் பிரிவு ஆகிய இரண்டிலும் ஒரே நாளில் 2 வெள்ளிப் பதக்கங்களை வென்ற ஒரே இந்திய வீராங்கனை என்ற மாபெரும் பெருமையை இளவேனில் வாலறிவன் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.