📅 Wednesday, 07 October 2026 IST | புரட்டாசி 21, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business October 07, 2026 04:03 AM

வெற்றி பயணம் திட்டம் எதிரொலி; தனியார் பஸ்களில் கட்டணம் உயர்வு

வெற்றி பயணம் திட்டம் எதிரொலி; தனியார் பஸ்களில் கட்டணம் உயர்வு

- நமது நிருபர் -

வெற்றி பயண திட்டத்தால், தனியார் பஸ்களில், தன்னிச்சையாக கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக, பயணியர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

தமிழகத்தில், வெற்றி பயணம் என்ற பெயரில், புறநகர் பஸ்களிலும், மகளிருக்கான இலவச பயண திட்டத்தை, முதல்வர் விஜய், அக்., 2ல் தொடங்கி வைத்தார். இத்திட்டத்திற்கு தனியார் மற்றும் மினிபஸ் உரிமையாளர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பினாலும், அரசை பகைத்துக்கொள்ள முடியாது என்பதால், போராட்டம் மற்றும் வழக்குகளை, தனியார் பஸ் உரிமையாளர்கள் வாபஸ் பெற்றனர்.

இந்நிலையில், பல்வேறு இடங்களில், தனியார் பஸ்களில், டிக்கெட்டின் விலையை இரண்டு முதல் ஐந்து ரூபாய் வரை தன்னிச்சையாக உயர்த்தியுள்ளதாக பயணியர் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது குறித்து பயணியர் கூறியதாவது: தனியார் பஸ்களின் வருவாய் குறைந்ததால், அதை ஈடு கட்டும் வகையில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் பஸ்கள் திடீரென, எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் கட்டணத்தை உயர்த்தியுள்ளனர். அதன்படி, பட்டுக்கோட்டையில் இருந்து, தஞ்சாவூர் பழைய பஸ் ஸ்டாண்டிற்கு, தனியார் பஸ்களில் முன், 31 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்பட்ட நிலையில், தற்போது, 35 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.