📅 Thursday, 01 October 2026 IST | புரட்டாசி 15, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu October 01, 2026 08:03 AM

வீரமணி மீதான பாலியல் வழக்கை சிபிஐக்கு மாற்ற ஐகோர்ட் மறுப்பு

வீரமணி மீதான பாலியல் வழக்கை சிபிஐக்கு மாற்ற ஐகோர்ட் மறுப்பு

சென்னை: வீரமணி மீதான பாலியல் வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கையை ஏற்க ஐகோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது.

சிறுமியரை பாலியல் வன்முறை செய்தது தொடர்பாக, கிரானைட் நிறுவன உரிமையாளர் வீரமணி கைதாகி சென்னை புழல் சிறையில் அடைக்கப் பட்டுள்ளார். வீரமணி மீதான வழக்கை, சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றக்கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில், பொது நல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் ராஜசேகரன், வாராகி ஆகியோர், தாக்கல் செய்த பொது நல மனுவில்,'' வீரமணியுடன், ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகளை சேர்ந்த தலைவர்கள், உடனிருப்பது போன்ற புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பகிரப்படுகின்றன. அரசியலாக்கப்படும் வழக்கின் தீவிரத்தை கருதி, விசாரணையை சி.பி.ஐ., அல்லது சிறப்பு புலனாய்வு குழுவுக்கு மாற்ற வேண்டும்'' என கூறியிருந்தனர்.

இந்த வழக்கை இன்று (செப் 30) சென்னை ஐகோர்ட் நீதிபதி லஷ்மி நாராயணன் விசாரித்தார். நீதிபதி, ''சிறப்புக்குழு அமைத்து சில நாட்களே ஆன நிலையில் ஏன் சிபிஐக்கு மாற்ற வேண்டும், சிபிஐக்கு மட்டும் ஆப்ரிக்காவில் இருந்தா அதிகாரிகள் வருவார்கள்? மனுதாரர்களிடம் ஆதாரம் இருந்தால் நாளை 3 மணிக்கு சிறப்புக்குழு அதிகாரிகளிடம் வழங்க வேண்டும்'' என்றார்.

வீரமணி மீதான பாலியல் வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கையை ஏற்க ஐகோர்ட் மறுப்பு தெரிவித்தவிட்டது. இந்த வழக்கில் வரும் அக்டோபர் 7ம் தேதி விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய எஸ்.ஐ.டி.,க்கு நீதிபதி உத்தரவிட்டார்.