📅 Wednesday, 05 August 2026 IST | ஆடி 20, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu August 05, 2026 11:01 AM

"விஜய் அஞ்சி சென்றார்; நாங்கள் ஓடி ஒளிய மாட்டோம்"

"விஜய் அஞ்சி சென்றார்; நாங்கள் ஓடி ஒளிய மாட்டோம்"

"விஜய் அஞ்சி சென்றார்; நாங்கள் ஓடி ஒளிய மாட்டோம்" - திருச்சி விமான நிலையத்தில் உதயநிதி ஸ்டாலின்

திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தமிழக முதல்வர் விஜய் மற்றும் கடந்த ஆண்டு கரூரில் நடந்த துயர சம்பவம் குறித்துப் பேசினார்.

வழக்கு விசாரணைக்கு பிறகு சென்னை செல்ல திருச்சி விமான நிலையம் வந்த உதயநிதி ஸ்டாலின், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,

"கடந்த 2025-ம் ஆண்டு, செப்டம்பர் மாதம் கரூரில் நடைபெற்ற அரசியல் பரப்புரையின் போது ஏற்பட்ட கோரமான கூட்ட நெரிசலில் சிக்கி, குழந்தைகள், பெண்கள் என மொத்தம் 41 அப்பாவி மக்கள் உயிரிழந்தனர். அப்போது, கரூரில் இருந்து திருச்சி வந்த தற்போதைய முதலமைச்சர் விஜய், திருச்சி விமான நிலையத்திலிருந்து சென்னைக்குப் புறப்பட்டுச் சென்றார். அந்தச் சமயத்தில், திருச்சி விமான நிலையத்தில் திரண்டிருந்த பத்திரிகையாளர்கள், கரூரில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பினர்.

ஆனால், அந்தத் துயரத்திற்குப் பதிலளிக்க மனமில்லாமல், செய்தியாளர்களை எதிர்கொள்ள அஞ்சி அவர் எதற்கும் பதில் சொல்லாமல் அங்கிருந்து வேகமாகச் சென்றுவிட்டார். ஆனால், நாம் அப்படிப்பட்டவர்கள் அல்ல. எத்தகைய இக்கட்டான சூழ்நிலை வந்தாலும், எவ்வளவு கடுமையான கேள்விகள் எழுப்பப்பட்டாலும், செய்தியாளர்களை எதிர்கொண்டு மக்களுக்குப் பதில் சொல்லும் தைரியம் எப்போதும் நமக்கு உண்டு. எந்தச் சூழ்நிலையிலும் நாங்கள் செய்தியாளர்களைச் சந்திப்பதை விட்டு ஓடி ஒளிய மாட்டோம்" என காட்டமாகத் தெரிவித்தார்.