📅 Sunday, 16 August 2026 IST | ஆடி 31, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema June 22, 2026 12:01 PM

விஜய்க்கு அந்த பைத்தியம்.. குதிரையை பார்த்ததும்.. புட்டு புட்டு வைத்த ஷோபா.. இவ்வளவா?

விஜய்க்கு அந்த பைத்தியம்.. குதிரையை பார்த்ததும்.. புட்டு புட்டு வைத்த ஷோபா.. இவ்வளவா?

சென்னை: விஜய் இன்று தனது 52வது பிறந்தநாளை கொண்டாடுவதால் அவரது கட்சியினரும், ரசிகர்களும் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். அவரது தாய் ஷோபாவை விஜய் பிறந்தநாளையொட்டி சிறப்பு பேட்டி கண்டது தனியார் ஊடகம் ஒன்று. அந்தப் பேட்டியில் அவர் விஜய் குறித்து பல விஷயங்களை ஓபனாக பேசியிருக்கிறார். அவை சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளது.

விஜய் தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஜொலிப்பார் என யாருமே எடிர்பார்க்கவில்லை. அவரால் எதுவுமே செய்ய முடியாது என்றவர்களுக்கு அவர் தனது செயல் மூலம் தரமான பதிலடி கொடுத்துவிட்டார். சி.எம் ஆன பிறகும் அவரது செயல்பாடு கடுமையாக விமர்சிக்கப்படுகிறது. அதை பார்த்த தவெகவினரோ, 'இப்படித்தான் முதலில் பேசினார்கள். சி.எம் ஆகி பதில் கொடுத்தார். இப்போது செயல்பாட்டை விமர்சிக்கிறார்கள். அதையும் விரைவில் சரி செய்துகொண்டு மேற்கொண்டு ஜொலிப்பார்' என நம்பிக்கையோடு கூறுகிறார்கள்.

அந்த தன்மை அதிகம்: விஜய்க்கு எப்போதுமே ஒரு விஷயத்தை சீக்கிரம் கற்றுக்கொள்ளும் தன்மை சினிமாவில் அவரது கரியர் தொடக்கத்திலிருந்தே இருக்கிறது. அதன் காரணமாகத்தான் அடுத்தடுத்து அவரால் வெற்றி படங்களை கொடுக்க முடிந்தது என்றே சொல்லலாம். அதேபோல்தான் அரசியலுக்கும் வந்த பிறகும் பல விஷயங்களை உடனே உடனே கற்றுக்கொண்டுவிட்டார். அதை ஒவ்வொன்றாக வெளிப்படுத்திவருகிறார் என அவரது கட்சியினரும், ஆதரவாளரும் தொடர்ந்து சொல்லிவருகிறார்கள்.

இன்று பிறந்தநாள்: சூழல் இப்படி இருக்க அவர் தமிழ்நாடு முதலமைச்சரான பிறகு தன்னுடைய முதல் பிறந்தநாளை இன்று அவர் கொண்டாடுகிறார். அதனையொட்டி தமிழ்நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் களைகட்டியிருக்கின்றன. ஏராளமான நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படுகின்றன. அவருக்கு விவிஐபிக்கள், செலிபிரிட்டிகள், ரசிகர்கள் என அனைவருமே தங்களது வாழ்த்தினை தெரிவித்துவருகிறார்கள்.

தாய் ஷோபா பேட்டி: இந்நிலையில் விஜய்யின் தாய் கொடுத்திருக்கும் பேட்டி ஒன்றில் பேசியிருக்கும் விஷயங்கள் கவனத்தை ஈர்த்திருக்கின்றன. அந்தப் பேட்டியில், "சினிமாவில் அவருக்கு டயலாக் பேசுவது, பாடல்கள் பாடுவது எல்லாம் ஒரே டேக்தான். நடனத்தை அவர் கற்றுக்கொள்ளவில்லை. அவருக்கு ரிதம் குறித்த ஞானம் இருக்கிறது. அது அவருக்கு கைகொடுக்கிறது. எங்கள் ஏரியாவிலேயே திவாகர் மாஸ்டர் என்பவரிடம் கிட்டார் வாசிக்காவும் கற்றுக்கொண்டார். சி.எம் சூப்பராக வாசிப்பார்.

அப்பாவுக்கும் மகனுக்கும்: சிறு வயதிலிருந்தே அவரது தந்தையும், அவரும் செஸ் விளையாடுவார்கள். அவர்களில் எஸ்.ஏ.சிதான் நன்றாக விளையாடுவார். அனைத்துமே அப்பாவிடமிருந்து வந்ததுதான். இரண்டு பேருக்குமே கார் பைத்தியம். புதிதாக ஒரு கார் வந்தால் உடனே வீட்டில் நிற்கும். சிங்க பெண் சிறப்பு அதிரடி படை தொடக்க விழாவின்போது குதிரையை பார்த்ததும், 'குதிரையை எடுத்து ஓட்டிவிடுவாரோ' என நினைத்தேன். விஜய்க்கு குதிரையேற்றமும் தெரியும். அதெல்லாம் சினிமாவுக்காக அவர் கற்றுக்கொண்டதுதான். நடனம் மட்டும் கற்றுக்கொள்ளவில்லை. லாரியும் ஓட்டுவார். எதையுமே சீக்கிரம் கற்றுக்கொள்ளும் தன்மை அவரிடம் இருக்கிறது" என்றார்.