📅 Tuesday, 18 August 2026 IST | ஆவணி 2, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports May 28, 2026 12:32 AM

விளையாட்டு விடுதி சேர்க்கைக்கு, மாநில அளவிலான கைப்பந்து போட்டி நேற்று நடந்தது.

Sports

விளையாட்டு விடுதி சேர்க்கைக்கு, மாநில அளவிலான கைப்பந்து போட்டி நேற்று நடந்தது.

Google News Tamil Sports

வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடி, முத்தம்பட்டி அருகே உள்ள தனியார் பள்ளியில் கடந்த மார்ச், 17ல், பிளஸ் 2 பொதுத்தேர்வில் கணிதத்தேர்வு நடந்தது. அதில் பள்ளி நிர்வாகம் முறைகேடு செய்ததாக, மாவட்ட கல்வி அலுவலருக்கு புகார் சென்றது. தொடர்ந்து வாழப்பாடி போலீசார் வழக்குப்பதிந்து, பள்ளி முதல்வர் ஸ்டான்லி ஜான் பீட்டர், 35, கணித ஆசிரியர்கள் தினேஷ்பாபு, 33, கேசவன், 33, ஆகியோரை நேற்று கைது செய்தனர்.இது குறித்து போலீசார் கூறியதாவது: முத்தம்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில், பிளஸ் 2 மாணவர்களுக்கு அரசு பொது தேர்வு எழுத அங்கேயே தேர்வு மையம் அமைக்கப்பட்டிருந்தது. கணித தேர்வின் போது, அதன் ஆசிரியர்கள், ஏற்கனவே தேர்வுக்கான கேள்வித்தாளை தெரிந்து கொண்டு, அதற்கான விடையை துண்டுத்தாளில் எழுதி, பள்ளி கழிப்பறையில் வைத்துள்ளனர். இது குறித்து தேர்வு எழுதும் மாணவர்களுக்கும் தெரிவித்துள்ளனர்.அந்த மாணவர்கள் தேர்வு எழுதும் போது, அடிக்கடி கழிப்பறைக்கு சென்று வந்ததால், தேர்வு அலுவலர் சந்தேகம் அடைந்து அங்கு சென்று பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அவர், மாவட்ட கல்வி அலுவலருக்கு புகார் தெரிவித்தார். தொடர்ந்து போலீசார் விசாரித்ததில் முறைகேடு தெரியவந்தது. இதனால் பள்ளி முதல்வர், இரு ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.