📅 Wednesday, 30 September 2026 IST | புரட்டாசி 14, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema September 29, 2026 11:03 PM

VIP தனுஷே அரசியலுக்கு வந்துட்டாரு..அன்புத் தம்பி விஜய்... 4000 ரூபாய் எங்கே? கனிமொழி கிண்டல்

VIP தனுஷே அரசியலுக்கு வந்துட்டாரு..அன்புத் தம்பி விஜய்... 4000 ரூபாய் எங்கே? கனிமொழி கிண்டல்

தாராபுரம்: தாராபுரம் தனி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் களம் சுடச்சுடச் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக வேட்பாளர் எஸ். சுகன்யாவை ஆதரித்துப் பிரச்சாரம் செய்த திமுக துணை பொதுச்செயலாளரும் எம்.பி-யுமான கனிமொழி, தமிழக வெற்றி கழகத்தையும் அதன் தலைவரான நடிகர் விஜய்யையும் 'வேலையில்லா பட்டதாரி' நடிகர் தனுஷுடன் ஒப்பிட்டுப் பேசி கிண்டலடித்த பேச்சு சோஷியல் மீடியாவில் காட்டுத்தீயாக பரவி வருகிறது!

தூய சக்தி இப்போ வேண்டாத சக்தியா? தாராபுரம் பிரச்சாரக்கூட்டத்தில் ஆவேசமாகப் பேசிய கனிமொழி MP: தூய சக்தி, தூய சக்தினு சொல்லி மக்களை ஏமாத்துற வேலை இங்க நடந்துகிட்டு இருக்கு. வாக்களிச்ச மக்களோட மூஞ்சியில கரியைப் பூசி, அவங்களை அவமானப்படுத்தி, சத்யபாமாவை ராஜினாமா செய்ய வச்சு... இன்னைக்கு புதுசா இடைத்தேர்தலை நடத்தி 'இது எங்களோட ஸ்டாம்ப்'னு சொல்றாங்க. திடீர்னு 'வேண்டாத சக்தி'யா இருந்த சத்யபாமா, இப்போ திடீர்னு இவங்களுக்கு 'தங்கை சத்யபாமா'வா மாறியிருக்காங்க. திரையரங்குகளில் பழைய படத்தை 'புதிய பொலிவோடு' ரீ-ரிலீஸ் பண்ணுவாங்கள்ல... அதுமாதிரி இப்போ தேர்தல்ல இறக்கியிருக்காங்க.

ஒருத்தர் கூட போகல: திமுக மேல எத்தனை ஐடி ரெய்டு வந்துருச்சு? எத்தனை கைதுகள் நடந்தது? வாரத்துக்கு ஒரு ரெய்டு, வழக்குன்னு மத்திய அரசு மிரட்டி பார்த்தும் திராவிட முன்னேற்றக் கழகத்துல இருந்து ஒரே ஒரு எம்.எல்.ஏ அல்லது எம்.பி கூடக் கட்சி மாறணும்னு நினைக்கக்கூட இல்லை. அதான் திமுக.

அன்புத் தம்பி விஜய்: எங்க அண்ணன் ஸ்டாலினை 'மை டியர் ஸ்வீட் அங்கிள்'னு அவர் சொல்றாரு... அதனால நானும் அவரை அன்பா அன்புத் தம்பி விஜய்னு கூப்பிடுறேன். அன்பு தம்பி விஜய் தேர்தலுக்கு முன்னாடி என்ன சொன்னாரு? நான்தான் தமிழ்நாட்டின் தூய சக்தி, திமுக தீய சக்தி, நான் வந்தா அடுத்த நாளே தமிழ்நாடு சினிமா மாதிரி தலைகீழா மாறிடும்'னு சொன்னாரு. உண்மையிலேயே தமிழ்நாடு இப்போ தலைகீழாதான் போயிருக்கு. சினிமால அண்ணன் மேலிருந்து குதிச்சு வந்து தட்டிக் கேட்பாருன்னு நினைச்சு இளைஞர்களும் சகோதரிகளும் ஓட்டு போட்டாங்க. ஆனா, இந்த 'தூய சக்தி' வந்து நாலு மாசத்துல 500 குற்றச் சம்பவங்கள் நடந்திருக்கு.

தனுஷ் அரசியலுக்கு வந்துட்டாரு: தவெக தேர்தல் வாக்குறுதியில சொன்ன வேலையில்லாத பட்டதாரிகளுக்கான ரூ. 4,000 உதவித்தொகை இன்னும் யாருக்கும் கிடைக்கல. ஆனா, 'வேலையில்லா பட்டதாரி' (VIP) படத்துல நடிச்ச நடிகர் தனுஷே அரசியலுக்கு வந்துட்டாரு என்று கனிமொழி MP செம கிண்டலாகப் பேச, கூட்டத்தில் சிரிப்பலையும் பலத்த கரவொலியும் எழுந்தது. தவெக விஜய்யை தனுஷின் 'VIP' படத்தோடு ஒப்பிட்டுக் கனிமொழி விளாசிய இந்த வீடியோ தற்போது இணையத்தில் பயங்கர ட்ரெண்டாகி வருகிறது!