📅 Thursday, 15 October 2026 IST | புரட்டாசி 29, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports October 15, 2026 01:05 PM

விவிஎஸ் லக்ஷ்மன் தான் காரணம்.. பிசிசிஐ தந்த பதவியை மறுத்த 100 டெஸ்ட் ஆடிய சீனியர் வீரர்கள்

விவிஎஸ் லக்ஷ்மன் தான் காரணம்.. பிசிசிஐ தந்த பதவியை மறுத்த 100 டெஸ்ட் ஆடிய சீனியர் வீரர்கள்

விவிஎஸ் லக்ஷ்மன் தான் காரணம்.. பிசிசிஐ தந்த பதவியை மறுத்த 100 டெஸ்ட் ஆடிய சீனியர் வீரர்கள்

மும்பை: 100 டெஸ்ட் போட்டிகளுக்கு அருகில் விளையாடிய மூத்த நட்சத்திர வீரர்கள் இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவர் பதவியை ஏற்க மறுப்பு தெரிவித்துள்ள விவகாரம் பிசிசிஐ வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

பிசிசிஐ தலைமைத் தேர்வாளராக இருந்த அஜித் அகர்கரின் பதவிக்காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, காலியாக உள்ள மேற்கு மண்டல தேர்வாளர் பதவிக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டன. ஆனால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட முன்னாள் விக்கெட் கீப்பர் பார்த்திவ் படேல் இந்த பதவிக்கு விண்ணப்பிக்காமல் திடீரென பின்வாங்கினார்.

இந்திய கிரிக்கெட்டில் பெங்களூரு தேசிய சிறப்பு மையத்தின் தலைவர் விவிஎஸ் லக்ஷ்மனின் ஆதிக்கம் அளவுக்கு அதிகமாக வளர்ந்து வருவதே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. இனி தேர்வுக்குழுவின் அனைத்து ஆலோசனைக் கூட்டங்களிலும் லக்ஷ்மன் நேரடியாகப் பங்கேற்பார் என்று பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா அறிவித்திருந்தார். இதனால் தேர்வாளர்களுக்கு முழு சுதந்திரம் கிடைக்காது என்ற அச்சம் உருவானது.

இதனிடையே சுமார் 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அனுபவம் வாய்ந்த இரண்டு முன்னணி இந்திய முன்னாள் வீரர்களை அணுகி, தலைமைப் பொறுப்பை ஏற்குமாறு பிசிசிஐ உயர்மட்ட நிர்வாகிகள் ரகசியமாகப் பேசினர். பெரிய நட்சத்திரங்களை உள்ளே கொண்டு வருவதற்காக தேர்வுக்குழுவின் சம்பள பட்ஜெட்டை 19.35 கோடி ரூபாயாக பிசிசிஐ உயர்த்திய போதும், அந்த ஜாம்பவான்கள் பிசிசிஐயின் அழைப்பை உடனடியாக நிராகரித்துவிட்டனர்.

லக்ஷ்மனின் நிழலில் வேலை செய்ய முன்னணி வீரர்கள் மறுத்துவிட்டதால், மற்றொரு முன்னாள் வீரரான ரமேஷ் பவாரை அந்தப் பொறுப்பில் நியமிக்க பேச்சுவார்த்தை நடக்கிறது. அதுவரை தற்போதைய இடைக்காலத் தலைவர் பிரக்யான் ஓஜாவே தனது பதவியில் நீடிப்பார் எனத் தெரிகிறது. அனுபவ வீரர்கள் தேர்வுக்குழுவுக்குள் வர மறுத்திருப்பது பிசிசிஐ நிர்வாகத்திற்குப் பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரத்தில் மற்றொரு தகவலும் கூறப்படுகிறது. இதற்கு முன் தேர்வுக் குழு தலைவராக மூன்று ஆண்டுகள் சிறப்பாக செயல்பட்ட அஜித் அகர்கர், வீரர்கள் காயத்தில் விவிஎஸ் லக்ஷ்மனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தான் விலகியதாகவும், பிசிசிஐ அகர்கரை 2027 ஒருநாள் போட்டி உலகக்கோப்பை வரை தக்க வைக்க விரும்பியதாகவும் கூறப்படுகிறது. ஆனால், விவிஎஸ் லக்ஷ்மனுடன் மோதலை விரும்பாத அகர்கர் பதவி நீட்டிப்பை மறுத்து வெளியேறி இருக்கிறார்.