Business
October 02, 2026 01:06 PM
வணிகப் பயன்பாட்டு சிலிண்டரின் விலை உயர்வு!
வணிகப் பயன்பாட்டு சிலிண்டரின் விலை உயர்வு!
வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை உயர்ந்தப்பட்டுள்ளது.
வணிக பயன்பாட்டிற்கான காஸ் சிலிண்டரின் விலை மாதந்தோறும் முதல் தேதியில் விலை அதிகரிப்பு அல்லது குறைவு என மாற்றம் ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில் வணிக பயன்பாட்டிற்குப் பயன்படுத்தப்படும் 19 கிலோ எடை கொண்ட எரிவாயு சிலிண்டரின் விலை இன்று (01.10.2026) முதல் உயர்ந்தப்பட்டுள்ளது.
அதன்படி வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.66.50 உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் ஒரு சிலிண்டரின் விலை ரூ.2,983-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே சமயம், 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்ட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
Business