📅 Friday, 02 October 2026 IST | புரட்டாசி 16, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema October 02, 2026 01:03 PM

வழிகாட்டிப் பலகையில் இந்தியில் ஊர் பெயர்.! ஆக்‌ஷனில் இறங்கிய சிஎம் விஜய்

வழிகாட்டிப் பலகையில் இந்தியில் ஊர் பெயர்.! ஆக்‌ஷனில் இறங்கிய சிஎம் விஜய்

வழிகாட்டிப் பலகையில் இந்தியில் ஊர் பெயர்.! ஆக்‌ஷனில் இறங்கிய சிஎம் விஜய்- அதிகாரிகள் சஸ்பெண்ட்

Name Boards In Hindi : இருமொழிக் கொள்கைக்கு எதிராக மாநில நெடுஞ்சாலைத் துறையின் வழிகாட்டிப் பலகையில் இந்தி இடம்பெறக் காரணமாய் இருந்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உடனடியாகத் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

வழிகாட்டி பலகையில் இந்தி பெயர்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் இருந்து நாசரேத் செல்லும் மாநில நெடுஞ்சாலையில் ( எண் 93) அமைக்கப்பட்டுள்ள வழிகாட்டி பலகையில் திருநெல்வேலி, ஆழ்வார்திருநகரி, தூத்துக்குடி, திருச்செந்தூர் ஆகிய ஊர்களின் பெயர்கள் தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளுடன் இந்தியிலும் எழுதப்பட்டிருந்தது சமூகவலைதளத்தில் பரவியது. இதனையடுத்து பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனத்தை தெரிவித்து வந்தனர். பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டிருந்த அறிக்கையில், இந்தித் திணிப்புக்கு எதிராக போராடிய தமிழகத்தில் மாநில அரசே இந்தியில் பெயர்களை எழுதியிருப்பது கண்டிக்கத்தக்கது என குறிப்பிட்டிருந்தார்.

மாநில அரசே இந்தியில் ஊர்ப்பெயர்களை எழுதுவதா.?

மேலும் கடந்த காலங்களில் தமிழ்நாட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் இந்தியில் ஊர்ப்பெயர்கள் எழுதப்பட்டதைக் கண்டித்து பல போராட்டங்கள் நிகழ்ந்துள்ளன. ஆனால், மாநில அரசே இந்தியில் ஊர்ப்பெயர்களை எழுதுவதை ஏற்க முடியாது. இதன் பின்னணி என்ன? யார் காரணம்? என்பது குறித்து அரசு விசாரணை நடத்த வேண்டும். தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். வழிகாட்டி பலகைகளில் இந்தி எழுத்துகள் உடனடியாக அகற்றப்பட வேண்டும் என கேட்டுக்கொண்டிருந்தார்.

இந்த நிலையில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் நாசரேத் மாநில நெடுஞ்சாலையில் (SH-93) புதிதாக வைக்கப்பட்ட வழிகாட்டிப் பலகையில் தமிழ் மற்றும் ஆங்கிலத்துடன், இந்தி மொழியிலும் ஊர்ப் பெயர்கள் எழுதப்பட்டிருந்தது தெரியவந்தவுடன் இந்தி எழுத்துக்கள் உடனடியாக நீக்கப்பட்டன.

அதிகாரிகள் சஸ்பெண்ட்- தமிழக அரசு அதிரடி

தமிழ்நாடு அரசின் இருமொழிக் கொள்கைக்கு எதிராக மாநில நெடுஞ்சாலைத் துறையின் வழிகாட்டிப் பலகையில் இந்தி இடம்பெறக் காரணமாய் இருந்த நெடுஞ்சாலைத்துறை உதவிக் கோட்டப் பொறியாளர் மற்றும் உதவிப் பொறியாளர் ஆகியோர் உடனடியாகத் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், துறைரீதியான நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசின் இருமொழிக் கொள்கைக்கு எதிராகச் செயல்படும் அரசு அலுவலர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அந்த அறவிப்பில் கூறப்பட்டுள்ளது.

தலைப்பு செய்திகள்

ஃபோட்டோ கேலரி