Weather Forecast: காஞ்சி, செங்கல்பட்டு மக்களுக்கு ஜாக்பாட்! வெயிலுக்கு நடுவே வெளியான
Weather Forecast: காஞ்சி, செங்கல்பட்டு மக்களுக்கு ஜாக்பாட்! வெயிலுக்கு நடுவே வெளியான கூல் நியூஸ்!
தமிழகத்தில் பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தமிழகத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் இயல்பை விட வெப்பம் அதிகரித்து காணப்பட்டது. குறிப்பாக நேற்றைய தினம் ஓரிரு இடங்களில் இயல்பை விட 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் உயர்ந்து பதிவானது. இதில் அதிகபட்சமாக மதுரை மாவட்டத்தில் 104.7 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகி மக்களை வாட்டியெடுத்தது.
தற்போது தமிழக கடலோரப் பகுதிகளின் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்று அழுத்த தாழ்வு பாதை நிலவி வருகிறது. இதன் காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்றும் நாளையும் (ஜூலை 23, 24) இடி, மின்னல் மற்றும் மணிக்கு பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் கணித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து வரும் ஜூலை 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில், மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள், வட மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமான மழை தொடர வாய்ப்புள்ளது.
வட மாவட்டங்களின் வரிசையில் காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களிலும் அடுத்த சில நாட்களுக்கு இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. கடந்த சில நாட்களாக பகல் நேரங்களில் நிலவி வந்த கடுமையான வெப்பத்தின் தாக்கம் குறைந்து, மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்பதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தலைப்பு செய்திகள்
ஃபோட்டோ கேலரி