📅 Wednesday, 23 September 2026 IST | புரட்டாசி 7, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports September 23, 2026 05:05 AM

ஆசிய பெண்கள் கிரிக்கெட்: பாகிஸ்தான் 145 ரன்கள் சேர்ப்பு

ஆசிய பெண்கள் கிரிக்கெட்: பாகிஸ்தான் 145 ரன்கள் சேர்ப்பு

ஆசிய விளையாட்டு பெண்கள் கிரிக்கெட்டில் வெண்கலப்பதக்கத்திற்கான போட்டியில் பாகிஸ்தான் 145 ரன்கள் சேர்த்துள்ளது.

வெண்கலப்பதக்கம்

ஆசிய விளையாட்டு போட்டிகள் ஜப்பானில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் டி20 கிரிக்கெட்டில் வெண்கலப்பதக்கத்திற்கான போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இதில் பாகிஸ்தான், வங்காளதேசம் மோதி வருகின்றன.

இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, களமிறங்கிய பாகிஸ்தான் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 145 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியின் கேப்டன் பாத்திமா சனா அதிகபட்சமாக 45 ரன்கள் குவித்தார்.

வங்காளதேசம் தரப்பில் அந்த அணியின் நஹிடா அக்தர், ஷொர்னொ அக்தர், ரிடு மொனி தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதையடுத்து, 146 ரன்கள் எடுத்தால் வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றலாம் என்ற இலக்குடன் வங்காளதேசம் களமிறங்கி விளையாட உள்ளது.