📅 Monday, 19 October 2026 IST | ஐப்பசி 2, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business October 19, 2026 01:00 PM

ஆர்டர் கேன்சல் செய்தும் கிரெடிட் கார்டு ரீஃபண்ட் வரவில்லையா ? அபராதம் இல்லாமல் தப்பிக்க இந்த ட்ரிக்ஸ் போதுமாம்

ஆர்டர் கேன்சல் செய்தும் கிரெடிட் கார்டு ரீஃபண்ட் வரவில்லையா ? அபராதம் இல்லாமல் தப்பிக்க இந்த ட்ரிக்ஸ் போதுமாம்

தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் ஆன்லைன் ஷாப்பிங் என்பது வழக்கத்தை விட அதிகமாக இருக்கும். அதற்கு காரணம் பண்டிகை காலங்களில் அவர்கள் தரும் சலுகைகள் தான். இந்த நிலையில் நாம் ஆர்டர் செய்த ஒரு பொருள் நமக்கு செட்டாகாது என தெரிந்த பின்னர் அந்த ஆர்டரை கேன்சல் செய்வதும் வழக்கம் தான். அவ்வாறு கிரெடிட் கார்டு மூலம் ஷாப்பிங் செய்து பின்னர் அந்த ஆர்டரை கேன்சல் செய்துவிட்டால் அந்த பணம் கிரெடிட் கார்டுக்கு மீண்டும் வந்துவிடும். ஆனால் சில சமயங்களில் கிரெடிட் கார்டுக்கு அந்த தொகை வருவதில் தாமதம் ஏற்படும். அந்த சூழ்நிலையில் நாம் அபராததில் இருந்து தப்பிக்க என்ன செய்வது என்ற ஆலோசனைகளை பார்க்கலாம்ஆன்லைன் ஷாப்பிங்கில் பொருளை ரத்து செய்ய பிறகும் கிரெடிட் கார்டு பில்லில் Total Amount Due காட்டப்படலாம். அதுபோன்ற சூழ்நிலையில் நாம் பில் தொகையை கட்டுவது தான் நல்லது. ஏனென்றால் ரீஃபண்ட் தொகை கிரெடிட் கார்டுக்கு மீண்டும் வந்து சேர 7 முதல் 14 நாட்கள் வரை ஆகலாம். எனவே ரீஃபண்ட் வரும் வரை காத்திருக்கலாம் என இருந்தால் வங்கி உங்களுக்கு அபராதம் விதிக்கும்.பில் செலுத்தாமல் இருந்தால் என்ன நடக்கும் ?வங்கியின் விதிமுறைகளின் படி உங்களின் மாதாந்திர பில் உருவான பிறகு கணக்கில் ரீஃபண்ட் வரவு வைக்கப்பட்டால் அது பழைய நிலுவையை ரத்து செய்யாது.ஒருவேளை ரீஃபண்ட் வந்த பிறகு பில் கட்டலாம் என நாம் தவறாக இருந்தால் அதற்கான பாதிப்புகள் என்னவென்று தற்போது பார்க்கலாம்நிலுவை தொகைக்கு அதிகபட்சமாக 42 % வரை வட்டி வசூலிக்கப்படும்1300 ரூபாய் வரை தாமத கட்டணம் வசூலிக்கப்படும்நாம் பில் செலுத்தவில்லை என்ற தகவல் அமைப்புகளுக்கு கண்டிப்பாக செல்லும். அதன் காரணமாக நம் கிரெடிட் ஸ்கோர் கடுமையாக குறையும்வட்டி இல்லாத கால சலுகை உடனடியாக ரத்து செய்யப்படும்வாடிக்கையாளர் செய்ய வேண்டிய விஷயங்கள்ரீஃபண்ட் வரவரைக்கும் காத்திருக்காமல் பில் வந்தவுடன் அதனை செலுத்துவிட வேண்டும்ரீஃபண்ட் பணம் என்பது அடுத்த மாத பில்லில் அட்ஜஸ்ட் செய்யப்படும்ரீஃபண்ட் பணம் வந்த பிறகு அந்த பணத்தை உங்களுடைய சேமிப்பு கணக்கிற்கு மாற்ற கோரி வங்கியிடம் விண்ணப்பிக்கலாம்