📅 Sunday, 18 October 2026 IST | ஐப்பசி 1, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business October 16, 2026 09:03 PM

ஆயூதபூஜையை முன்னிட்டு பொரி அரிசியின் விலை கிடுகிடு உயர்வு...!!!

ஆயூதபூஜையை முன்னிட்டு பொரி அரிசியின் விலை கிடுகிடு உயர்வு...!!!

ஆயூதபூஜையை முன்னிட்டு பொரி அரிசியின் விலை கிடுகிடு உயர்வு...!!!

திண்டுக்கல்: சரஸ்வதி மற்றும் ஆயூதபூஜைக்காக திண்டுக்கல் மற்றும் புதுக்கோட்டையில் பொரி தயாரிக்கும் பணிகள் தீவிரம் அடைந்துள்ளன. அரிசி தட்டுப்பாட்டால் பொரி மூட்டை விலை உயர்ந்துள்ளதாக உற்பத்தியுளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆயூதபூஜை முன்னிட்டு திண்டுக்கலில் பொரி தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், பொரி அரிசி தட்டுப்பாடு எதிரொலியால் மூட்டை 470 ரூபாக்கு விற்பனை செய்யப்படுகிறது. மூட்டைக்கு 90 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளதாக கூறும் உற்பத்தியாளர்கள், இந்த விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர்.

சரஸ்வதி மற்றும் ஆயூதபூஜையை முன்னிட்டு புதுக்கோட்டையில் பொரி மூட்டைகள் விற்பனைக்கு தயாராக உள்ளனர், தொடர்ந்து பொரி உற்பத்தி செய்யும் பணியில் தொழிலாளர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

இந்த ஆண்டு அரிசி விலை உயர்வால் 6 கிலோ எடையுள்ள பொரி மூட்டை 40ரூபாய் முதல் 50ரூபாய் வரை உயர்ந்து 430 முதல் 440 க்கு விற்கப்பட்டு வருகிறது, நாடு முழுவதும் சரஸ்வதி மற்றும் ஆயூதபூஜை வரும் 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் கொண்டாடபட உள்ளது.