Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
தமிழக பாஜகவின் புதியத் தலைவராக நடிகர் சரத்குமார் நியமிக்கப்பட வாய்ப்பிருப்பதாக பாஜக வட்டாரங்கள் தெரித்துள்ளன. தற்போதைய மாநிலத் தலைவராக இருக்கும் நயினார் நாகேந்திரனின் செயல்பாடுகளில் பாஜக தேசிய தலைமைக்கு திருப்தி இல்லாத காரணத்தால் அவர் மாற்றப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
ஒரே இரவில் முடிவெடுத்த சரத்குமார்
ஏற்கனவே தமிழ்நாட்டில் திரைத்துறையில் இருந்து வந்து கட்சித் தொடங்கி, ஆட்சியையும் முதல்வர் விஜய் பிடித்திருக்கும் நிலையில், நடிகர் தனுஷ், சிவக்கார்த்திகேயன் உள்ளிட்டோரும் அரசியலுக்கு வர ஆழம் பார்த்து வருகின்றனர். இப்படியான சூழலில் தமிழக பாஜகவும் அனைவருக்கும் தெரிந்த முகத்தை தங்களுடைய கட்சியின் அடையாளமாக தமிழ்நாட்டில் கொண்டுச் செல்ல முடிவெடுத்திருக்கிறது. அதனடிப்படையில், ஒரே ராத்திரியில் முடிவெடுத்து, தன்னுடைய சமத்துவ மக்கள் கட்சியையே பாஜகவில் இணைத்த சரத்குமாருக்கு தமிழக பாஜக தலைவர் பதவி வழங்க திட்டமிடப்பட்டு வருவதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.
எல்.முருகனுக்கு என்ன பதவி ?
அதே நேரத்தில் மத்திய இணை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தமிழக பாஜகவிற்கு திரும்பவுள்ள எல்.முருகனுக்கு மாநில அமைப்புச் செயலாளர் பொறுப்பு வழங்கப்படவிருப்பதாகவும் கூறப்படுகிறது.
தலைப்பு செய்திகள்
ஃபோட்டோ கேலரி