📅 Wednesday, 09 September 2026 IST | ஆவணி 24, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
World News September 09, 2026 02:03 PM

அமெரிக்க ஓபன் 2026: விடிய விடிய நடந்த காலிறுதி.. வாந்தி எடுத்த நடப்பு சாம்பியன் அல்காரஸ் அதிர்ச்சி தோல்வி

அமெரிக்க ஓபன் 2026: விடிய விடிய நடந்த காலிறுதி.. வாந்தி எடுத்த நடப்பு சாம்பியன் அல்காரஸ் அதிர்ச்சி தோல்வி

அமெரிக்க ஓபன் 2026: விடிய விடிய நடந்த காலிறுதி.. வாந்தி எடுத்த நடப்பு சாம்பியன் அல்காரஸ் அதிர்ச்சி தோல்வி

நியூயார்க்: அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் நடப்பு சாம்பியன் கார்லோஸ் அல்காரஸ் காலிறுதி சுற்றில் அதிர்ச்சி தோல்வியை தழுவினார்.உலகின் இரண்டாம் நிலை வீரரான ஸ்பெயினின் நாட்டின் அல்காரஸ் அமெரிக்காவின் நம்பர் ஒன் வீரரும் மற்றும் உலகின் எட்டாம் நிலை வீரரான பெண் ஷெல்டன்-ஐ எதிர்கொண்டார்.

இந்த போட்டி இரவு தாமதமாக தொடங்கி விடிய விடிய அமெரிக்க நேரப்படி அதிகாலை 3:30 மணி வரை நடைபெற்றது. இதனால் இரு வீரர்களும் தூக்கத்தை தொலைத்து விட்டு அரையிறுதி வாய்ப்புக்காக கடுமையாக போராடினர்.

குறிப்பாக காயத்திலிருந்து மீண்டு வந்து விளையாடி வரும் அல்காரஸ் திடீரென்று உடல்நலவு குறைவு ஏற்பட்டு வாந்தி எடுத்தார். அதையும் மீறி களத்தில் அவர் கடுமையாக போராடினார். முதல் செட்டில் வெற்றி பெற இருவரும் கடுமையாக உழைத்தனர். இதில் ஏழுக்கு ஆறு என்ற கணக்கில் முதல் செட்டை கார்லெஸ் அல்காரஸ் வென்றார்.

எனினும் இரண்டாவது மற்றும் மூன்றாவது செட்டில் அபாரமாக விளையாடிய செல்டன் 6க்கு 1, 6க்கு 3 என்ற கணக்கில் தனதாக்கினார். இன்னும் தனது அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்தி அல்காரஸ் நான்காவது செட்டில் 6க்கு 1 என்ற கணக்கில் எளிதில் வீழ்த்தினார். இதனை அடுத்து போட்டியை தீர்மானிக்கும் ஐந்தாவது செட்டில் இருவரும் ஒரு மினி யுத்தத்தை நிகழ்த்தினர்.

இதில் செல்டன் ஆக்ரோஷத்தை காட்டி ஆறுக்கு ஆறு என்ற கணக்கில் செட்டை சமன் செய்தார். இதை அடுத்து வெற்றியாளரை தீர்மானிக்கக்கூடிய டை பிரேக் நடைபெற்றது. இதில் செல்டன் பத்துக்கு 7 என்ற கணக்கில் முன்னிலை பெற்று அரை இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றார்.

இதன் மூலம் நடப்பு சாம்பியன் அல்காரஸ் தொடரை விட்டு வெளியேறினார். இந்த போட்டி நான்கு மணி நேரம் 28 மணி நிமிடம் வரை நீடித்தது. அமெரிக்கா நேரத்தில் இந்த போட்டி அதிகாலை 3:30 மணிக்கு மேல்தான் முடிவடைந்தது. இவ்வளவு தாமதமாக போட்டி முடிந்தது அமெரிக்க ஒபனில் ஒரு சாதனையாக கருதப்படுகிறது.

இதனிடையே தனது ஹட்ரிக் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும் முனைப்புடன் களமிறங்கிய பெல்லாரஸ் வீராங்கனை சபலெங்கா கால் இறுதியில் செக் குடியரசு வீராங்கனை ஆன லென்டா நசக்கோவாவை ஏழுக்கு ஆறு, 3க்கு ஆறு, ஏழுக்கு ஆறு என்ற செட் கணக்கில் வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.