📅 Sunday, 04 October 2026 IST | புரட்டாசி 18, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil October 03, 2026 08:04 AM

அமெரிக்காவிடம் சிங்கப்பூர் ஆடவரை ஒப்படைக்க நீதிபதி ஒப்புதல்

அமெரிக்காவிடம் சிங்கப்பூர் ஆடவரை ஒப்படைக்க நீதிபதி ஒப்புதல்

அனைத்துலக அளவில் சட்டவிரோதப் பங்கு வர்த்தகக் கும்பலை நடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள சிங்கப்பூரரான ஜி ஸியி என்பவரை அமெரிக்காவிடம் ஒப்படைக்கச் சிங்கப்பூர் நீதிபதி ஒப்புதல் அளித்துள்ளார்.

இந்தக் கும்பல் குறியீட்டு மொழிகளையும், ரகசியக் கைப்பேசிகளையும் பயன்படுத்தி அதிகாரிகளின் கண்காணிப்பிலிருந்து தப்பித்துள்ளது.

ஜி ஸியி மீது அமெரிக்காவில் பங்கு மோசடி, பண மோசடி என ஆறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

அமெரிக்காவின் கோரிக்கையைத் தொடர்ந்து, அவர் கடந்த 2024ஆம் ஆண்டு ஜூலை மாதம் சிங்கப்பூர்க் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இந்த விவகாரத்தைத் தாமதப்படுத்த ஜி ஸியி பலமுறை முயற்சிகளை மேற்கொண்டார்.

இந்நிலையில், இரண்டு ஆண்டுகளாக நடைபெற்ற பல்வேறு சட்ட நடைமுறைகளுக்குப் பிறகு, ஜி ஸியியை அமெரிக்காவிடம் ஒப்படைப்பதற்கான அனைத்து சட்டத் தேவைகளும் நிறைவடைந்துள்ளதாக மாவட்ட நீதிபதி செங் யுஷி அக்டோபர் 1ஆம் தேதி வெளியிட்ட எழுத்துப்பூர்வ தீர்ப்பில் தெரிவித்தார்.

சட்ட அமைச்சரின் ஆணை வரும்வரை ஜி ஸியி சிறையில் அடைக்கப்படுவார்.

முன்னதாக, செப்டம்பர் 22ஆம் தேதி நீதிபதி தனது முடிவை ஜி ஸியிடம் விளக்கினார். உயர் நீதிமன்றத்தில் மறுஆய்வு செய்யக் கோரலாம் என்றும் அவருக்குத் தெரிவிக்கப்பட்டது.

அதைப் பற்றி யோசிக்க இரண்டு நாள்கள் அவகாசம் கேட்ட ஜி ஸியி, தனது உரிமையை விட்டுக்கொடுக்கப் போவதில்லை என்று செப்டம்பர் 24ஆம் தேதி நீதிமன்றத்தில் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

அவர் தொடர்ந்து தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.