Anbil Mahesh Inquiry : ‘3 மணி நேரமாக விசாரணை’ அன்பில் மகேஸூடம் கேட்கபடும் கேள்விகள் என்னென்ன ?
Anbil Mahesh Inquiry : ‘3 மணி நேரமாக விசாரணை’ அன்பில் மகேஸூடம் கேட்கபடும் கேள்விகள் என்னென்ன ?
பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக இருந்தபோது தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாக கூறி நூறு கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் இன்று சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை அலுவலகத்தில் ஆஜரானர் அன்பில் மகேஸ். அவரிடம் 3 மணி நேரமாக விசாரணை நடைபெற்று வருகிறது. ஏற்கனவே, அன்பில் மகேஸ் திருச்சி வீட்டில் 8 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில், விசாரணைக்கு ஆஜராகியிருக்கும் அவரிடம் பல்வேறு கேள்விகளை கொடுத்து அதற்கு பதிலளிக்குமாறு காவல்துறை கேட்டுள்ளது.
என்னென்ன கேள்விகளை கேட்கிறது போலீஸ்
காலை 11 மணிக்கு மத்திய குற்றப்பிரிவில் ஆஜராகியிருக்கும் அன்பில் மகேஸூடம் நூறு கேள்விகள் கொண்ட பட்டியலை காவல்துறை கொடுத்துள்ளதாகவும் அதில் பெரும்பாலான கேள்விகளுக்கு ‘ ஆம், இல்லை’ என்ற வகையில் பதில் அளிக்குமாறு கேட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
குறிப்பாக, இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பிடி. அரசகுமாரை உங்களுக்கு தெரியுமா? அவர் தனியார் பள்ளிகளிடம் பணம் வசூலித்து உங்களிடம் கொடுத்தாரா? தலைமறைவாக உள்ள உதவியாளர் முத்துகுமார் இப்போது எங்கே இருக்கிறார்? என்பன உள்ளிட்ட கேள்விகள் கேட்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
அதே நேரத்தில் காவல்துறை சார்பில் கண்டுபிடிக்கப்பட்ட ஆவணங்களின் அடிப்படையிலும் அன்பில் மகேஸீடம் கேள்விகள் எழுப்படும் என்றும் அவருடைய பதில்கள் அனைத்தும் வீடியோ ரெக்கார்ட் செய்யப்படுவதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
10 ஆண்டுகளுக்கான அங்கீகாரம் எத்தனை பள்ளிகளுக்கு கொடுக்கப்பட்டது ?
அதே நேரத்தில் கடந்த பிப்ரவரி மாதம்தான் பள்ளிகளுக்கு தொடர் அங்கீகாரத்தை ஒவ்வொரு ஆண்டும் கொடுப்பதற்கு பதில் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை கொடுக்கலாம் என்ற அரசாணை வெளியிடப்பட்டிருக்கிறது. ஆனால், அந்த அரசாணையின்படி ஒரு பள்ளிக்கு கூட 10 ஆண்டுகளுக்கான தொடர் அங்கீகாரம் தரப்படவில்லை என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். அங்கீகாரமே பெறாமல் எப்படி தனியார் பள்ளிகள் பல கோடிகளை கொட்டி கொடுத்திருப்பார்கள்? என்ற கேள்விகளும் எழாமல் இல்லை. ஆனால், அரசியல் ரீதியாக அன்பில் மகேஸ்க்கு நெருக்கடி கொடுப்பதற்காகவே, பிடி. அரசகுமாரை வைத்து தவெக அரசு கட்டம் கட்டி வருவதாகவும், இந்த பண மோசடிக்கான உரிய ஆதாரங்கள் காவல்துறை வசமே இல்லையென்கிறார்கள் அன்பில் மகேஸ் ஆதரவாளர்கள்.
தலைப்பு செய்திகள்
ஃபோட்டோ கேலரி