📅 Sunday, 06 September 2026 IST | ஆவணி 21, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Health September 06, 2026 07:02 PM

அங் மோ கியோவில் புத்தாக்க முயற்சியில் உள்ளூர் வணிகங்கள்

அங் மோ கியோவில் புத்தாக்க முயற்சியில் உள்ளூர் வணிகங்கள்

அக்கம்பக்க சிறுவணிகங்களை ஊக்குவிக்கும் முன்னோடித் திட்டத்தில், அங் மோ கியோவில் 10 புதிய உள்ளூர் வணிக நிறுவனங்கள் இணைந்துள்ளன.

அங் மோ கியோவில் உள்ள ‘ஸ்பிரவுட்@ஏஎம்கே’ எனப்படும் தற்காலிக் கடைத்தொகுதியில் இடம்பெற்றுள்ள அந்த வணிகங்கள், என்டர்பிரைஸ்எஸ்ஜி அமைப்பின் 12 மாத அக்கம்பக்க புத்தாக்கம், உருமாற்றத் திட்டத்தின் (Heartland Innovation and Transformation - HIT) கீழ் புதிய வணிக உத்திகளைப் பரிசோதிக்கவுள்ளன.

புதிய திட்டத்தில் வணிகங்களை வர்த்தக, தொழில் மற்றும் கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சின் மூத்த துணையமைச்சர் லோ யென் லிங், தேசிய வளர்ச்சி மற்றும் போக்குவரத்து அமைச்சின் மூத்த துணைமைச்சர் சுன் ஷுயெலிங் ஆகியோர் வரவேற்றனர்.

உடனடி உணவு வகைகளை அறிமுகப்படுத்தும் ‘ஜிசார்’ உணவகம் முதல் சுயமாகச் செய்துகொள்ளும் விழாக்களுக்கான உபகரணங்களை விற்பனை செய்யும் நிறுவனம் வரை பல்வேறு உணவு, சில்லறை வணிகம், வாழ்க்கைமுறை சேவைகள் வரை அவை வழங்குகின்றன.

மேலும் நான்கு நிறுவனங்கள் இந்த ஆண்டின் நான்காம் காலாண்டில் இணையவுள்ளன.

என்டர்பிரைஸ் சிங்கப்பூர், வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் (HDB), அங் மோ கியோ வர்த்தகர்கள் சங்கம்,சிங்கப்பூர் உள்ளூர் வர்த்தக மையம் ஆகியவற்றின் கூட்டு ஆதரவில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இத்திட்டத்தின் மூலம் பங்கேற்கும் வணிகங்களுக்குப் பயிற்சிப் பயிலரங்குகள், ஆலோசனைகள், தொழிற்துறை வழிகாட்டிகளின் உதவிகள் வழங்கப்படும்.

மேலும், கைவினைப் பயிற்சிப் பயிலரங்குகள், பண்பாட்டு விழாக்கள் போன்ற சமூக அம்சங்களையும் இந்த வணிகங்கள் ஒருங்கிணைக்கும்.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

மாறிவரும் வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கேற்ப உள்ளூர் வணிகங்கள் தங்களை புதுப்பித்துக் கொள்ளவும், புதிய திறன்களை வளர்த்துக்கொள்ளவும் இத்திட்டம் வழிவகுக்கும் என எண்டர்பிரைஸ் சிங்கப்பூரின் இயக்குநர் ஜேசன் லிம் தெரிவித்தார்.

இத்திட்டத்தை வெற்றிகரமாக முடிக்கும் நிறுவனங்கள், வீவக கடை வீடுகளில் காலியாக உள்ள கடைகளை நேரடியாகப் பெற விண்ணப்பிக்கலாம். மேலும், அவர்களின் முதல் மூன்றாண்டு வாடகைக் காலத்தில் 10 விழுக்காடு வாடகைத் தள்ளுபடியையும் பெறமுடியும்.