📅 Monday, 19 October 2026 IST | ஐப்பசி 2, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Religion October 19, 2026 03:01 PM

BB Tamil 10: கடவுள் பாதி, மிருகம் பாதி ஜேசன்; வாசன் செய்த சம்பவம்!

BB Tamil 10: கடவுள் பாதி, மிருகம் பாதி ஜேசன்; வாசன் செய்த சம்பவம்!

சற்று பக்கத்தில் தேடியிருநதால் வைரம் கிடைத்திருக்கும். ‘எழுபத்தொன்பது அடி வரை தோண்டி சலித்துப் போய் கைவிட்டவனுக்கு எண்பதாவது அடியில் தங்கம் இருந்த கதை தெரியாமல் போய் விட்ட துரதிர்ஷ்டம் மாதிரி இருக்கிறது.

கடவுள் பாதி, மிருகம் பாதி, கலந்து வைத்த கலவை - ஜேசன்

ஒவ்வொரு வாரமும் ஜேசனின் கேரக்டரை கவனிப்பது சுவாரசியமாக இருக்கிறது. ‘கடவுள் பாதி, மிருகம் பாதி, கலந்து செய்த கலவை’ போல இருக்கிறார். எப்போதும் கெத்தாக சுற்றும் ஜேசன் உடைந்து போனதை இந்த வாரத்தில் பார்க்க முடிந்தது.

தன்னுடைய துணிகளை தூக்கி வீசிய அவினாஷ் உடனான மோதலில் ‘வளர்ப்பு’ பற்றி பேசி மாட்டிக் கொண்டார் ஜேசன். ஒவ்வொரு சீசனிலும் இந்தப் பிரச்சினை வந்து விடுகிறது. எந்தவொரு பெற்றோரும் தங்களின் பிள்ளைகளை சிறப்பாக வளர்க்கவே நினைப்பார்கள். ஒருவரின் ஒழுங்கீனத்தை சுட்டிக் காட்ட ‘நல்லா வளர்த்தாங்க பாரு.. உங்க அம்மா அப்பா’ என்று குற்றம் சாட்டுவது மோசமான அணுகுமுறை.