📅 Tuesday, 15 September 2026 IST | ஆவணி 30, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu September 15, 2026 03:31 PM

சாமுண்டீஸ்வரியை கைதானது கார்த்தியின் மாஸ் பிளான் உடைபட்டதா?.. கார்த்திகை தீபம்!

சாமுண்டீஸ்வரியை கைதானது கார்த்தியின் மாஸ் பிளான் உடைபட்டதா?.. கார்த்திகை தீபம்!

சென்னை: கார்த்திகை தீபம் நேற்றைய எபிசோடில், ரவுடி ரேவதியை குறிவைத்து சுட முயற்சி செய்ய, இதை கவனித்த கார்த்தி, அருகில் இருந்த ஒரு பொருளை தூக்கி ரவுடியை நோக்கி எறிகிறார். அந்த பொருள் ரவுடியின் கை மீது பட்டு, அவன் சுடும் குண்டு தவறி ரேவதியின் கையில்பட்டு விட ரேவதி துடித்துப்போகிறாள். இதனால் பதறிப்போன கார்த்தி, ரேவதியை தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு செல்கிறார். இந்த சம்பவம் குறித்து பேசிய ராஜராஜன், இது சாமுண்டீஸ்வரியோட வேலையா இருக்கும் என்றார். ஆனால், கார்த்தி, அத்தை இப்படி செய்ய மாட்டார்க, அத்தைக்கு ரேவதி மீது கோபம் இருக்கலாம். கொலை செய்யும் அளவுக்கு அவர்கள் செல்ல மாட்டார்கள் என்கிறார்.

கார்த்திகை தீபம்: மறுபக்கம் சிவனான்டி போலீசை அழைத்து, மேடையில் ரேவதியை சுட ஆளை அனுப்பியது சாமுண்டீஸ்வரிதான் என்று வழக்கு பதிவு செய்து, சாமுண்டீஸ்வரியை கைது செய்ய வேண்டும் என்று கூறி அவருக்கு பணம் கொடுத்து அனுப்புகிறார். வீட்டிற்கு வரும் சந்திரகலா, ரேவதியை யாரோ துப்பாக்கியால் சுட்டுவிட்ட விஷயத்தை சொல்கிறார். இதைக்கேட்ட வருத்தப்படும் சாமுண்டீஸ்வரி யார் இந்த வேலையை செய்து இருப்பா என்று கேட்க,உடனே சந்திரகலா வேற யாரு அக்கா, இத செய்தது கார்த்தி தான், அப்போ தான் இந்த குடும்பத்தில் இருப்பவங்க எல்லாம் உனக்கு எதிரி ஆவாங்க அதற்காக இந்த வேலையை கார்த்தி தான் செய்து இருப்பான் என்று சொல்கிறாள்.

நடந்தது என்ன: இதையடுத்து வீட்டுக்கு வரும் போலீஸ் சாமுண்டீஸ்வரி மீது பரமேஸ்வரி புகார் கொடுத்து இருக்கிறார். ரேவதியை கொல்ல முயன்றதாக அவர் புகார் கொடுத்து இருப்பதால் கைது செய்ய வேண்டும் என சொல்லி சாமுண்டீஸ்வரியை கைது செய்து அழைத்து செல்கிறார். இந்த விஷயத்தை மயில்வாகனம் ஃபோன் செய்து கார்த்தியிடம் சொல்ல, கார்த்தி பாட்டி அப்படி எந்த புகாரும் கொடுக்கவில்லை. இதில் ஏதோ பிரச்சனை இருக்கிறது. அதை நான் பார்த்துக்கொள்கிறேன் என கார்த்திக் அந்த ரௌடியை தேடி செல்கிறார். இதையடுத்து என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.