📅 Saturday, 19 September 2026 IST | புரட்டாசி 3, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu September 19, 2026 12:33 PM

சென்னை விமான நிலையம்: தனியாருக்கு மாற்றக் கோரி பிரதமர் மோடிக்கு முதல்

சென்னை விமான நிலையம்: தனியாருக்கு மாற்றக் கோரி பிரதமர் மோடிக்கு முதல்

சென்னை விமான நிலைய நிர்வாகத்தை வேறு ஒரு நிறுவனத்திடம் ஒப்படைக்கக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்-அமைச்சர் விஜய் கடிதம் எழுதி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

பிரதமருக்கு கடிதம்

இது தொடர்பாக ஆங்கில நாளேடு ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில், ”சென்னை விமான நிலையத்தின் தற்போதைய செயல்பாட்டில் உள்ள சில குறைபாடுகள் குறித்து அதிருப்தி தெரிவித்துள்ள தமிழ்நாடு அரசு, விமான நிலைய நிர்வாகத்தில் மாற்றம் தேவை என்ற நிலைப்பாட்டை எடுத்துள்ளது. பிரதமர் மோடிக்கு இது தொடர்பாக முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் கடந்த ஆகஸ்டு மாதம் கடிதம் எழுதி உள்ளார்.

சென்னை விமான நிலையம்

தனியார் மயம்

தொழில் முதலீடுகளை அதிக அளவில் ஈர்க்கும் தமிழ்நாட்டுக்கு அதற்கேற்ற சிறப்பான விமான நிலையம் அவசியம் என்பதால், தற்போதைய ஆபரேட்டர்- நிர்வாகமான இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தை (Airports Authority of India – AAI) மாற்றிவிட்டு வேறு ஆபரேட்டர் நிர்வாகத்தை கொண்டு வர வேண்டும்” என்று அதில் கூறப்பட்டிருந்தது.

அதாவது சென்னை விமான நிலையத்தின் ஆபரேட்டரை மாற்ற வேண்டும் என்ற தமிழக அரசின் தற்போதைய நடவடிக்கை, அடிப்படையில் விமான நிலையத்தை தனியார் மயமாக்குவதற்கான முயற்சியாக அமைந்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைக்கத் திட்டமிடப்பட்டிருந்த விமான நிலையத் திட்டத்தை தமிழக அரசு கைவிட முடிவு செய்ததன் தொடர்ச்சியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.