📅 Sunday, 18 October 2026 IST | ஐப்பசி 1, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema October 16, 2026 09:04 PM

சூப்பர் ஸ்டாரின் சூப்பர் லைன் அப்.. தர்மன், கமல் படம், ஜெயிலர் 3.. இனிமே குறி மிஸ் ஆகாது!

சூப்பர் ஸ்டாரின் சூப்பர் லைன் அப்.. தர்மன், கமல் படம், ஜெயிலர் 3.. இனிமே குறி மிஸ் ஆகாது!

சென்னை: எந்திரன் படத்தில் இருந்து பார்த்தால் ரஜினிகாந்த் வெற்றியும் தோல்வியும் மாறி மாறி பார்த்து வருகிறார். எந்திரன் படத்தைத் தொடர்ந்து அவர் நடிப்பில் வெளியான லிங்கா மற்றும் கோச்சடையான் படங்கள் ஃப்ளாப் ஆகின.

கபாலி திரைப்படம் மீண்டும் வெற்றிப் படமாக மாறிய நிலையில், அதன் பின்னர் வெளியான காலா சறுக்கியது. 2.0 திரைப்படமும் விமர்சன ரீதியாக அடி வாங்கியது.

பேட்ட திரைப்படம் மீண்டும் ரஜினிகாந்த் ரசிகர்களை ஆட்டம் போட வைத்த நிலையில், தர்பார் மற்றும் அண்ணாத்த என அடுத்தடுத்து வெளியான 2 படங்களும் சொதப்பின.

வெற்றியும் தோல்வியும்: 2023ம் ஆண்டு இயக்குநர் நெல்சன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு மிகப்பெரிய வெற்றியை ஜெயிலர் படத்தின் மூலம் கொடுத்தார். ஆனால், ஜெயிலர் படத்துக்குப் பிறகு ரஜினிகாந்த் நடித்த லால் சலாம், வேட்டையன் மற்றும் கூலி உள்ளிட்ட படங்கள் ரசிகர்களை திருப்திப்படுத்தவில்லை. இந்நிலையில், ஜெயிலர் 2 மூலம் மீண்டும் ரசிகர்களை சந்தோஷத்தின் உச்சிக்கே கொண்டு சென்றுள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

இனிமே மிஸ் ஆகாது: ஜெயிலர் 2 திரைப்படம் ஒட்டுமொத்த ரசிகர்களுக்கும் செம ட்ரீட்டாக அமைந்துள்ள நிலையில், ரஜினிகாந்தின் அடுத்தடுத்த படங்கள் என்ன ஆகும் என பழைய பேட்டர்னை பார்த்து ட்ரோல் செய்யும் ரசிகர்களுக்கு அடுத்த படம் அஸ்வத் மாரிமுத்து படம் என்பதால் தர்மன் கண்டிப்பாக தாறுமாறாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த படத்தைத் தொடர்ந்து மீண்டும் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் நடிக்கும் படம் உருவாக உள்ள நிலையில், இனிமேல் மிஸ்ஸே ஆகாது என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

அஸ்வத் மாரிமுத்துவுக்கு பெரிய பொறுப்பு: ஜெயிலர் 2 படத்தின் வெற்றியை விட அந்த படம் ரசிகர்களை திருப்திப்படுத்திய விதத்தை விட கூடுதலாக ஒரு படமாக தர்மன் படத்தைக் கொடுத்து கொண்டாட வைக்க வேண்டிய பெரிய பொறுப்பு அஸ்வத் மாரிமுத்துவுக்கு உள்ளது. ஓ மை கடவுளே, டிராகன் படங்கள் வெற்றிப் பெற்ற நிலையில், அதே ஸ்டைலில் ரஜினிகாந்தை வைத்து தர்மன் படத்தை அஸ்வத் மாரிமுத்து சொதப்பாமல் கொடுத்து விட்டாலே போதும் பாக்ஸ் ஆபீஸ், புரமோஷனை எல்லாம் ரசிகர்கள் பார்த்துக் கொள்வார்கள். ரஜினிகாந்தின் வசூல் சாதனைகளை தகர்த்தெறிய அஜித் குமார், சூர்யா, சிவகார்த்திகேயன் எல்லாம் எவ்வளவு முயற்சித்தாலும் கஷ்டம் தான் என்கின்றனர்.