📅 Monday, 10 August 2026 IST | ஆடி 25, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema August 09, 2026 06:33 AM

DC

DC

சென்னை: டிசி படத்தை தியேட்டருக்கு செல்லும் ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், தமிழ் சினிமாவில் இருந்து யாருமே ஒரு வாழ்த்துக் கூட சொல்லவில்லையே என நினைத்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு முதல் ஆளாக சூர்யா பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

இந்த வாரம் தமிழ் சினிமாவில் மாதவன் நடிப்பில் ஜிடி நாயுடு திரைப்படமும் லோகேஷ் கனகராஜ் நடிப்பில் டிசி திரைப்படமும் வெளியானது. வசூலில் டிசி திரைப்படம் வேறலெவல் சம்பவம் செய்து வருகிறது. அடுத்த வாரம் கூட இந்த படம் தான் ஏகப்பட்ட தியேட்டர்களில் ஓடும் என்கின்றனர்.

இந்நிலையில், அடுத்த வாரம் சூர்யாவின் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில், இந்த வாரம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் டிசி படத்தை சூர்யா பாராட்டி எக்ஸ் தளத்தில் ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

10 கோடியை கடந்த வசூல்: அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ், வாமிகா கபி, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலர் நடிப்பில் ஆகஸ்ட் 7ம் தேதி வெளியான டிசி திரைப்படம் இதுவரை 10 கோடி ரூபாய் வசூலை கடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இன்று மாலை மற்றும் இரவு காட்சிகளுடன் சுமார் 12 கோடி வரை வசூல் ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாராட்டிய சூர்யா: லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக நடித்த டிசி படத்தை ஏகப்பட்ட இயக்குநர்களுக்கு ப்ரீமியர் ஷோவாக சன் பிக்சர்ஸ் காட்டிய நிலையில், பல இயக்குநர்கள் அந்த படம் குறித்து தங்கள் சமூக வலைதளங்களில் ஒரு போஸ்ட் கூட போடவில்லை. ஆனால், நடிகர் சூர்யா தற்போது முதல் ஆளாக டிசி படம் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருவதை கேட்டு சந்தோஷமாக உள்ளது. லோகேஷ் கனகராஜ் மற்றும் அருண் மாதேஸ்வரனுக்கு இதயம் கனிந்த வாழ்த்துக்களும் அன்புகளும் அனிருத்தோட இசையை மக்கள் திரையரங்குகளில் கொண்டாடி வருவதை பார்க்கும் போது ரொம்பவே சந்தோஷமாக உள்ளது. ஒட்டுமொத்த டீமுக்கும் வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.

அடுத்த வாரம் சூர்யா படம்: டிசி திரைப்படம் இந்த வாரம் பிக்கப் ஆகி பக்காவாக பாக்ஸ் ஆபீஸை நிரப்பி வரும் நிலையில், அடுத்த வாரம் சூர்யாவின் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்துக்கும் சரியான போட்டியாக அமையும் என்கின்றனர். சன் பிக்சர்ஸ் பல தியேட்டர்களை விட்டுத் தராது என்றும் கூறுகின்றனர். விஸ்வநாத் அண்ட் சன்ஸ் மற்றும் விஷாலின் மகுடம் உள்ளிட்ட படங்கள் அடுத்த வாரம் வெளியாக உள்ள நிலையில், டிசி திரைப்படம் இரண்டு படங்களுடன் பாக்ஸ் ஆபீஸில் மோத காத்திருக்கிறது.

ரோலக்ஸ் ஆரம்பம் ஆகுமா?: லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக அல்லு அர்ஜுன் படத்தை இயக்கப் போகிறார். ரோலக்ஸ் படத்தை சூர்யாவை வைத்து லோகேஷ் கனகராஜ் எப்போது ஆரம்பிப்பார் என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். அதே போல அந்த இரும்புக்கை மாயாவி படத்தை எடுத்தாலும் வெறித்தனமாக இருக்கும் என்கின்றனர்.