📅 Saturday, 15 August 2026 IST | ஆடி 30, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema August 15, 2026 12:05 PM

DC Box Office: 100 கோடி வசூலை நோக்கி டிசி.. சூர்யாவுடன் பாக்ஸ் ஆபீஸில் மோதும் லோகேஷ் கனகராஜ்!

DC Box Office: 100 கோடி வசூலை நோக்கி டிசி.. சூர்யாவுடன் பாக்ஸ் ஆபீஸில் மோதும் லோகேஷ் கனகராஜ்!

சென்னை: ஆகஸ்ட் 14ம் தேதி சூர்யாவுடன் வசூலில் விஷால் மோதுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடந்த வாரம் வெளியான படத்தை வைத்துக் கொண்டு லோகேஷ் கனகராஜ் செம டஃப் கொடுத்து வருகிறார்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ், வாமிகா கபி, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி நடிப்பில் வெளியான டிசி திரைப்படம் இதுவரை உலகளவில் 70 கோடி வசூலை கடந்துள்ளது.

கூலி திரைப்படம் வெளியாகி 1 வருடம் ஆன நிலையில், அந்த படம் குறித்த ட்ரோல்கள் ஒருபக்கம் வந்தாலும், ஒரு வருடத்தில் ஒட்டுமொத்த ரசிகர்களையும் பாராட்டும்படி செய்து சாதித்து விட்டார் லோகேஷ் கனகராஜ் என்று தான் சொல்ல வேண்டும்.

டிசி 8வது நாள் வசூல்: கடந்த வெள்ளிக்கிழமை வெளியான லோகேஷ் கனகராஜின் டிசி திரைப்படம் நேற்று சூர்யாவின் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் மற்றும் விஷாலின் மகுடம் படங்கள் வெளியான நிலையிலும், 2.86 கோடி வசூலை ஈட்டி மாஸ் காட்டியுள்ளது. அனிருத் இசையில் ரசிகர்கள் இன்னமும் ஹேங்கோவரிலேயே அடிக்ட் ஆகியுள்ள நிலையில், இந்த வாரமும் டிசி படத்துக்கு ஏகப்பட்ட டிக்கெட் புக்கிங் அதிகரித்து வருகிறது. விஷாலின் மகுடம் படம் முதல் நாளில் தமிழ்நாட்டில் வெறும் 40 லட்சம் மட்டுமே ஈட்டிய நிலையில், டிசி படம் அந்த படத்தை விட பல மடங்கு வசூலை நேற்று அள்ளியுள்ளது.

100 கோடியை நோக்கி: இந்த ஆண்டு வெளியான படங்களில் கருப்பு மற்றும் ஜன நாயகன் என 2 கோலிவுட் படங்கள் மட்டுமே இதுவரை 100 கோடி வசூலை கடந்துள்ளதாக கூறுகின்றனர். பராசக்தி, தாய் கிழவி, யூத் படங்களின் வசூலை விரைவில் டிசி முறியடித்து 100 கோடி கிளப்பில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை இந்தியளவில் 51.48 கோடி வசூலையும் உலகளவில் 70.23 கோடி வசூலையும் டிசி அள்ளியுள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. இந்த வாரம் சனி மற்றும் ஞாயிறு மீண்டும் வசூல் அதிகரித்தால் இந்த வார முடிவுக்குள் 90 கோடி முதல் 100 கோடி வரை வசூலை ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிகபட்சம் அடுத்த வார இறுதிக்குள்ளாவது 100 கோடியை கடக்கும் டிசி என உறுதியாக கூறுகின்றனர்.

கேக் வெட்டிக் கொண்டாட்டம்: டிசி படத்தின் வெற்றியை மைத்ரி மூவி மேக்கர்ஸ் கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளது. அல்லு அர்ஜுனை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ள படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கவுள்ள நிலையில், லோகேஷ் கனகராஜின் வெற்றியை அந்த படக்குழு கொண்டாடியுள்ளது.