📅 Tuesday, 11 August 2026 IST | ஆடி 26, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema August 11, 2026 10:02 AM

DC Day 4 Box Office

DC Day 4 Box Office

சென்னை: அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக அறிமுகமாகியிருக்கும் திரைப்படம் டிசி. இதில் அவருடன் வாமிகா கபி, சஞ்சனா உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் அனிருத் இசையமைத்திருக்கிறார். சில நாட்களுக்கு முன்பு வெளியான படத்துக்கு ரசிகர்களிடையே அமோக ஆதரவு கிடைத்திருக்கிறது. இந்நிலையில் அதன் மொத்த வசூல் குறித்து தெரியவந்திருக்கிறது.

இயக்குநராக தென்னிந்திய சினிமாவில் ஜொலிப்பவர் லோகேஷ் கனகராஜ். ஏற்கனவே விஜய்யை வைத்து அவர் இயக்கிய மாஸ்டர் படத்திலும், ஸ்ருதிஹாசனின் பாடல் ஒன்றிலும் கேமரா முன் தோன்றியிருந்தார். அந்த தைரியத்தோடு அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் டிசி படத்தில் ஹீரோவாக அறிமுகமாகியிருக்கிறார் லோகி. இயக்குநராக வெற்றி பெற்றது போல் ஹீரோவாகவும் வெற்றி பெறுவாரா என்ற எதிர்பார்ப்பு பலரிடம் எழுந்திருந்தது. இதில் அவருடன் வாமிகா கபி உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள்.

அருண் மாதேஸ்வரன் ஸ்டைல்: அருண் மாதேஸ்வரனின் படத்தை ரசிப்பதற்கு என்று ரசிகர் கூட்டம் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர் இதுவரை இயக்கிய ராக்கி, சாணிக்காயிதம், கேப்டன் மில்லர் ஆகிய மூன்று படங்களுமே டார்க் ஜானரில் ஆக்‌ஷன் காட்சிகளோடு ரத்தம் தெறிக்க தெறிக்க உருவாகியிருந்தன. அவை மூன்றுமே சுமார் வரவேற்பை பெற்றாலும்; அருணின் ட்ரீட்மென்ட் அனைவருக்குமே பிடித்திருந்தது. எனவே மூன்று படங்களுக்குள்ளாகவே தமிழின் முன்னணி இயக்குநர் என்ற பெயரை அவர் பெற்றுவிட்டார்.

படம் ஓகேயா?: டிசி திரைப்படமும் அந்த ஜானரில் வந்திருந்தாலும்; இதில் சொல்லப்பட்டிருக்கும் மைய கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஒரு மனிதருக்கு படிப்பு எவ்வளவு முக்கியம் என்பதையும், பெற்றோர்களால் கைவிடப்படும் குழந்தைகளின் வாழ்க்கை சரியான வழிகாட்டுதலும், படிப்பும் இல்லாவிட்டால் எப்படியெல்லாம் திசை மாறி சென்று; அவர்களை நரகத்தில் தள்ளுகிறது என்பதையும் தன்னுடைய ஸ்டைலில் சொல்லியிருந்தார் இயக்குநர். அது ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது.

வன்முறை ஓவர்தான்: எதிர்பார்த்தபடியே இப்படத்திலும் வன்முறை கொஞ்சம் ஓவர் டோஸாகத்தான் இருந்தது. இருப்பினும் படத்தில் அவர் சொன்ன கருத்துக்காக அதை பொறுத்துக்கொள்ளலாம். முக்கியமாக லோகேஷ் கனகராஜின் நடிப்பு பட்டாசாக இருந்தது. ஒவ்வொரு ஃப்ரேமிலும் அவர் ஸ்க்ரீன் ப்ரெசன்ஸ் 100 படங்களில் நடித்தது போல் இருந்ததாக ரசிகர்கள் கொண்டாடினார்கள். மேலும் இன்னும் சில வருடங்களுக்கு அவர் ஹீரோவாக நடிப்பதில் எந்தப் பிரச்னையும் இருக்கப்போவதில்லை என்பது அவர்களது நிலைப்பாடு ஆகும்.

வசூல் நிலவரம்: இந்நிலையில் விமர்சன ரீதியாக பாராட்டை பெற்ற டிசி; வசூலில் என்ன நிலைமையில் இருக்கிறது என்பதை Sacnilk இணையதளம் வெளியிட்டிருக்கிறது. அதன்படி நான்காவது நாளான நேற்று அப்படம் மொத்தம் 5 கோடியே 70 லட்சம் ரூபாயை அள்ளியிருக்கிறதாம். தமிழில் நான்கு கோடி ரூபாயும், தெலுங்கில் ஒரு கோடியே 50 லட்சம் ரூபாயும், ஹிந்தியில் 20 லட்சம் ரூபாயும் வசூலாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் நான்கு நாட்களில் அப்படம், 26 கோடியே 65 லட்சம் ரூபாயை அள்ளியிருப்பதாக கூறப்பட்டுள்ளது. இன்னும் சில நாட்களில் 50 கோடி ரூபாய் வசூலை எட்டிவிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.