📅 Monday, 05 October 2026 IST | புரட்டாசி 19, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics October 05, 2026 02:03 PM

DMK: துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு

DMK: துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு

DMK: துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி

DMK Dal Procurement Issue: பருப்பு வரத்து குறையும்போதும் தற்போதைய விலையிலேயே கொள்முதல் செய்வோம் என அரசினால் உறுதியளிக்க முடியுமா? என தவெகவிற்கு திமுகவின் சக்கரபாணி கேள்வி எழுப்பியுள்ளார்.

DMK Dal Procurement Issue: துவரம்பருப்பை குறைந்த விலைக்கு கொள்முதல் செய்தவர்கள், பாமாயிலை மட்டும் கூடுதல் விலைக்கு வாங்கியது ஏன்? எனவும் முன்னாள் அமைச்சர் சக்கரபாணி வினவியுள்ளார்.

பருப்பு கொள்முதல் - திமுக மீது ஊழல் குற்றச்சாட்டு

திமுக ஆட்சிக்காலத்தில் துவரம் பருப்பு கொள்முதல் தொடர்பாக வெளியிடப்பட்ட டெண்டர் மே 2ம் தேதி இறுதி செய்யப்பட்டது. அதன்மூலம் கொள்முதல் செய்யப்பட்ட துவரம் பருப்பு கடந்த ஆகஸ்ட் மாத இறுதி வரை விநியோகத்திற்காகப் பயன்படுத்தப்பட்டது. அதன்படி வாங்கப்பட்ட ஒரு கிலோ பருப்பின் விலை ரூ.109.15 ஆக இருந்துள்ளது. இந்த நிலையில் செப்டம்பர் மாதம் முதல் விநியோகம் செய்வதற்கான துவரம் பருப்பு கொள்முதல் தொடர்பான டெண்டர் ஆறு ஒப்பந்தத்தாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதில் ஒரு கிலோ பருப்பு வெறும் ரூ.77.89-க்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதனால் பருப்பின் கொள்முதல் செலவில் ஏற்பட்ட செலவு குறைப்பு, திமுக ஆட்சியில் போடப்பட்ட டெண்டர் மீது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளதாக ஆங்கில நாளேடு ஒன்று செய்தி வெளியிட்டு இருந்தது. மேலும் கடந்த ஆட்சியில் பருப்பு கொள்முதலில் ஊழல் நடைபெற்றுள்ளதாகவும் நெட்டிசன்கள் குற்றம்சாட்டி இருந்தனர்.

அரசு உறுதியளிக்குமா? என திமுக கேள்வி

பருப்பு கொள்முதல் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு, திமுக ஆட்சியில் உணவுத்துறை அமைச்சராக இருந்த சக்கரபாணி விளக்கமளித்துள்ளார். இதுதொடர்பான ட்விட்டர் பதிவில், “திமுக அரசைக் காட்டிலும் த.வெ.க. அரசில் குறைந்த விலையில் துவரம் பருப்பு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என ஆங்கில நாளேட்டில் உணவுப் பொருள் கொள்முதலின் எந்த அடிப்படைகளையும் கருத்தில் கொள்ளாத ஒரு கட்டுரை வெளியாகியிருக்கிறது. இது உண்மையென்றால், குறைந்த விலையில் கொள்முதல் செய்த TNCSC மேலாண் இயக்குநர் ஏன் மாற்றப்பட்டார்? எதிர்காலத்தில், வரத்து குறையும்போதும் இதே விலையில் கொள்முதல் செய்வோம் என அரசினால் உறுதியளிக்க முடியுமா?

இனிமேல், கொள்முதல் விலை உயர்ந்தால் அப்போது அதில் ஊழல் நடந்திருப்பதாகக் குற்றம் சாட்டலாமா? துவரம் பருப்பைக் குறைந்த விலையில் கொள்முதல் செய்தவர்கள், பாமாயிலை மட்டும் ஏன் முன்பைவிட அதிக விலைக்குக் கொள்முதல் செய்தார்கள் என கட்டுரையை எழுதியவர் விளக்குவாரா? துறையின் அமைச்சர், த.வெ.க.வில் உள்ள பிற தலைவர்களே கூட செய்யத் துணியாத ஒரு அவதூறை ஆங்கில நாளேடு உண்மைகளைச் சரிபார்க்காமல் வெளியிடுவது ஊடக அறமாகுமா?” என முன்னாள் அமைச்சர் சக்கரபாணி வினவியுள்ளார்.

இதையும் படியுங்கள்: "LATE" ஆக வந்ததால் திட்டிய பெற்றோர்..! ஆத்திரத்தில் தாத்தாவை பேட்டால் அடித்துக் கொன்ற பேத்தி - நடந்தது என்ன?

அரசு விநியோகம்:

இதனிடையே, ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ஒரு அட்டைக்கு ஒரு கிலோ பருப்பு ரூ.30 என்ற விலையில் விநியோகம் செய்யப்படுகிறது. இதன் காரணமாக அரசால் 20,000 மெட்ரிக் டன் துவரம் பருப்பு ஒரு மாத விநியோகத்திற்காக கொள்முதல் செய்யப்படுகிறது. 88% மக்கள் இந்த பருப்பை பெற்றுக் கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

தலைப்பு செய்திகள்

ஃபோட்டோ கேலரி