எந்த கட்சி குற்றம் செய்தாலும் நடவடிக்கை எடுக்கும் விஜய் சர்கார்; அமைச்சர் ராஜ்மோகன் பெருமிதம்
சென்னை: எந்த கட்சி குற்றம் செய்தாலும் நடவடிக்கை எடுக்கும் விஜய் சர்கார் நடந்து கொண்டு இருக்கிறது என அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.
சட்டசபையில் அமைச்சர் ராஜ்மோகன் பேசியதாவது: உண்மை எப்பொழுதும் சத்தமாக பேசும்; சட்டஒழுங்கில் சிறப்பான இடத்தை நோக்கி தமிழ்நாடு செல்கிறது. அரசியல் தலையீடு இல்லாத நிர்வாகம்; ஆளுங்கட்சி தலையீடு இல்லாத காவல்துறை. எந்த கட்சி குற்றம் செய்தாலும் நடவடிக்கை எடுக்கும் விஜய் சர்கார் நடந்து கொண்டு இருக்கிறது.
மாணவர்கள், ஆசிரியர்களுக்கு நான் சொல்வது ஒன்று தான். நீங்கள் நல்ல படியுங்கள். எந்த அச்சமும் வேண்டாம். இந்த அரசை பொறுத்தவரைக்கும், கல்வித்துறையில் இருந்து காவல்துறை வரைக்கும் அரசியல் தலையீடு இல்லாமல் நடுநிலையாக செயல்படுகிறது.
பெண்களுக்கு சிறப்பான பாதுகாப்பு அளிக்க நடவடிக்கை எடுத்துக்கொண்டே இருக்கிறோம். வரலாற்று சிறப்பு மிக்க இந்த ஆட்சியில் வெறும் 100 நாட்களில் எந்த வகையிலும் பாரபட்சம் இல்லாமல் மிகவும் நேர்மையாக இங்கு நடைபெறுவது நீதியின் ஆட்சி. இவ்வாறு ராஜ்மோகன் பேசினார்.
மேலும் அமைச்சர் ராஜ்மோகன் பேசியதாவது: நீட் ரகசியம் எனக்குத் தெரியும்னு 5 வருஷமா சொன்னது தான் பெரிய காதுகுத்து. சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படும் காது குத்து, பெண்கள் பாதுகாப்பாக இருப்பார்கள் காது குத்து, உலகம் முழுவதும் போதைப்பொருட்களை ஒழிக்க தான் எல்லா அரசும் போராடுகிறார்கள். போதைபொருள் ஜாபர் சாதிக் என்பவரை திமுக அயலக அணியில் வச்சி இருந்துச்சு, வரலாற்றை மறக்க கூடாது. இவ்வாறு ராஜ்மோகன் கூறினார்.