📅 Tuesday, 06 October 2026 IST | புரட்டாசி 20, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports October 06, 2026 01:08 PM

"எனது கடமை முடிந்தது".. இந்திய மகளிர் கிரிக்கெட் கேப்டன் பதவியில் இருந்து ஹர்மன்பிரீத் கவுர் விலகல்

"எனது கடமை முடிந்தது".. இந்திய மகளிர் கிரிக்கெட் கேப்டன் பதவியில் இருந்து ஹர்மன்பிரீத் கவுர் விலகல்

"எனது கடமை முடிந்தது".. இந்திய மகளிர் கிரிக்கெட் கேப்டன் பதவியில் இருந்து ஹர்மன்பிரீத் கவுர் விலகல்

கவுகாத்தி: இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் அனைத்து வடிவ போட்டிகளின் கேப்டன் பொறுப்பில் இருந்தும் விலகுவதாக ஹர்மன்பிரீத் கவுர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். கவுகாத்தியில் பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா, தலைமை பயிற்சியாளர் அமோல் முஜும்தார் மற்றும் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா ஆகியோர் பங்கேற்ற ஆய்வுக் கூட்டத்திற்குப் பிறகு இந்த முடிவு வெளியானது. ஆசிய விளையாட்டுப் போட்டியில் தொடர்ச்சியாக 2-வது முறையாக தங்கம் வென்ற கையோடு அவர் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளார்.

இதுகுறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஹர்மன்பிரீத் கவுர் கூறியதாவது - "அனைத்து வடிவ கிரிக்கெட் போட்டிகளிலும் இந்திய கேப்டன் பொறுப்பில் இருந்து நான் விலகுகிறேன். இது எளிதான முடிவு அல்ல. இதில் பல வருட நினைவுகள், தியாகங்கள் மற்றும் உணர்வுகள் நிறைந்துள்ளன. எனது கேப்டன் பொறுப்பு முடிவுக்கு வந்துவிட்டது, ஆனால் ஒரு சாதாரண வீராங்கனையாக கிரிக்கெட் விளையாட்டை ரசித்து ஆடும் எனது பயணம் தொடரும். இந்திய அணி தற்போது மிகவும் பாதுகாப்பான மற்றும் வலுவான இடத்தில் உள்ளது. எனது கடமையை நான் முழுமையாகச் செய்து முடித்துவிட்டேன்" என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

ஹர்மன்பிரீத் கவுர் தலைமையில் இந்திய அணி 2025 இல் முதல்முறையாக ஒருநாள் உலகக்கோப்பையை வென்று சரித்திரம் படைத்தது. மேலும் ஆசியக் கோப்பையை 8-வது முறையாக வென்றதும் இவரது தலைமையில்தான். மொத்தம் 211 சர்வதேச போட்டிகளில் இந்திய அணியை வழிநடத்தியுள்ள இவர், 155 டி20 போட்டிகளில் 92 வெற்றிகளையும், 51 ஒருநாள் போட்டிகளில் 30 வெற்றிகளையும் பெற்றுத் தந்து அதிக வெற்றிகளைக் குவித்த இந்திய கேப்டனாக சாதனை படைத்துள்ளார். இவர் தலைமையில் ஆடிய 5 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா 1 போட்டியில் மட்டுமே தோல்வியடைந்தது.

இதனையடுத்து இந்திய அணியின் அடுத்த கேப்டனாக ஸ்மிருதி மந்தனா பொறுப்பேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவருக்கு வழிவிட்டே ஹர்மன்ப்ரீத் கவுர் பதவி விலகி இருப்பதாக பிசிசிஐ வட்டாரங்கள் கூறுகின்றன.