Gold and silver rate today : அப்பாடா.! ரூ.10,000 குறைந்தது- தங்கம், வெள்ளி நகைப்பிரியர்களுக்கு குஷி-
Gold and silver rate today : அப்பாடா.! ரூ.10,000 குறைந்தது- தங்கம், வெள்ளி நகைப்பிரியர்களுக்கு குஷி- இன்றைய விலை நிலவரம் இதோ..
Gold and silver rate today : தங்கத்தின் விலை தான் உயர்கிறது என பார்த்தால் போட்டி போட்டு வெள்ளியின் விலையும் உயர்ந்து வருகிறது. இந்த நிலையில், இன்று தங்கம் மற்றும் வெள்ளியின் விலையானது குறைந்துள்ளது
புதிய உச்சத்தில் தங்கம் விலை
தங்கத்தின் விலையானது நாளுக்கு நாள் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது பெரிய அளவில் உயராமல் ஒரு லட்சத்து 4 ஆயிரம் முதல் ஒரு லட்சத்து 8 ஆயிரம் என்ற அளவில் விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் புதிய உச்சத்தை தொட தொடங்கியுள்ளது. அந்த வகையில் நேற்று ஒரு லட்சத்து 20 ஆயிரத்தை கடந்து தங்கத்தின் விலையானது விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதற்கு முக்கிய காரணமாக உலகளவில் நிலவும் பொருளாதார நிச்சயமற்ற தன்மைகள் மற்றும் போர் போன்ற புவிசார் அரசியல் பிரச்சனைகளால், முதலீட்டாளர்கள் பங்கு சந்தைகளில் பங்குகளை வாங்குவதை விட தங்கத்தில் முதலீடு செய்வதைப் பாதுகாப்பாகக் கருதுகின்றனர்.
தங்க நகைகளின் மீதான ஈர்ப்பு
இது மட்டுமில்லாமல் மற்ற நாட்டு மக்களை விட இந்திய மக்கள் தங்கத்தின் மீது அதீக ஈடுபாடு கொண்டுள்ளனர். அந்த வகையில், இந்தியாவில் திருமண மற்றும் பண்டிகைக் காலங்களில் தங்கத்திற்கான உள்நாட்டு நுகர்வு மற்றும் தேவை தொடர்ந்து அதிகமாக இருப்பது விலை உயர்வுக்கு வழிவகுக்கிறது
பிரேக்கே இல்லாமல் உயரும் தங்கம் விலை
தங்கத்தின் விலையானது கடந்த ஓரிரு வாரங்களாக தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அந்த வகையில் கடந்த 10 நாட்களில் மட்டும் சவரனுக்கு 10 ஆயிரம் ரூபாய் அளவிற்கு தங்கம் விலை குறைந்துள்ளது. இந்த நிலையில் இன்று தங்கத்தின் விலையானது கிராம் ஒன்றுக்கு 20 ரூபாய் குறைந்து 15,010 ரூபாய்க்கும், சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து 1,20.080 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை நிலவரம்
வெள்ளியின் விலையானது அதிரடியாக குறைந்துள்ளது. அந்த வகையில் கிராம் ஒன்றுக்கு 10 ரூபாய் குறைந்து 265 ரூபாய்க்கும், கிலோ பார் வெள்ளிக்கு 10 ஆயிரம் ரூபாய் குறைந்து 2 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தலைப்பு செய்திகள்
ஃபோட்டோ கேலரி