📅 Tuesday, 18 August 2026 IST | ஆவணி 2, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business August 17, 2026 01:03 PM

Gold and silver rate today : ஏறிய வேகத்தில் குறைந்தது தங்கம் விலை.! இன்றைய தங்கம், வெள்ளி விலை

Gold and silver rate today : ஏறிய வேகத்தில் குறைந்தது தங்கம் விலை.! இன்றைய தங்கம், வெள்ளி விலை

Gold and silver rate today : ஏறிய வேகத்தில் குறைந்தது தங்கம் விலை.! இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ...

Gold and silver rate today : தங்கத்தின் விலையானது நேற்று கிராமுக்கு 30 ரூபாய் உயர்ந்த நிலையில் இன்று அதே 30 ரூபாய் குறைந்துள்ளது. அதே நேரம் வெள்ளியின் விலையானது மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது.

அதிகரிக்கும் தங்கத்தின் மதிப்பு

தங்கத்தின் மீதான மதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு சவரன் 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையான ஒரு சவரன் தங்கத்தின் விலையானது 2026ஆம் ஆண்டு ஜனவரி மாதம் புதிய உச்சமாக ஒரு லட்சத்து 34 ஆயிரத்தை எட்டி நகைப்பிரியர்களை தலை சுற்ற வைத்தது. இதனையடுத்து பொருளாதார மாற்றம் காரணமாக தங்கத்தின் விலையானது குறைய தொடங்கியது. தற்போது ஒரு சவரன் 1 லட்சத்து 10 ஆயிரம் முதல் 1.15 லட்சம் என்ற அளவில் கடந்த 2 மாதமாக நீடித்து வருகிறது.

தங்கத்தில் அதிகரிக்கும் முதலீடு

உலகத்தில் பல்வேறு நாடுகளில் நடைபெற்று வரும் போர் காரணமாக பங்கு சந்தையானது ஏற்றம் இறக்கமாக காணப்பட்டு வருவதால் முதலீட்டாளர்கள் பாதுக்கான முதலீடாக தங்கத்தில் அதிகளவு முதலீட்டை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில் அமெரிக்கா- ஈரான் போர் காரணமாக கச்சா எண்ணெய் விலையானது புதிய உச்சத்தை தொட்டு வருவதால் முதலீட்டாளர்கள் தற்போது தங்கத்திற்கு பதிலான கச்சா எண்ணெய் மீது முதலீடு செய்து வருகிறார்கள். இதனால் தங்கத்தின் விலையனது சற்று குறைந்து வருகிறது.

ஏறி இறங்கும் தங்கம் விலை

இன்றைய தங்கம் விலை என்ன.?

தங்கத்தின் விலையானது கடந்த வாரம் இறங்கி வந்த நிலையில், நேற்று திடீரென அதிகரித்து நகைப்பிரியர்களை அதிர வைத்தது. இந்த நிலையில் இன்று குறைந்துள்ளது. அந்த வகையில் கிராம் ஒன்றுக்கு 30 ரூபாய் குறைந்து 13,150 ரூபாயக்கும், சவரனுக்கு 240 ரூபாய் குறைந்து 1,05,200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே ஏநரம் வெள்ளி விலையானது எந்த வித மாற்றமும் இல்லாமல் நேற்றைய விலையான கிராம் 240 ரூபாய்க்கும், கிலோ பார் வெள்ளி 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தலைப்பு செய்திகள்

ஃபோட்டோ கேலரி