📅 Wednesday, 30 September 2026 IST | புரட்டாசி 14, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
World News September 30, 2026 08:00 PM

ஹனோய் புதுப்பிப்புத் திட்டம்: மாற்றுக் கருத்துகள் இருப்பதை ஒப்புக்கொண்ட வியட்னாம், உல‌க‌ம் செய்திகள்

ஹனோய் புதுப்பிப்புத் திட்டம்: மாற்றுக் கருத்துகள் இருப்பதை ஒப்புக்கொண்ட வியட்னாம், உல‌க‌ம் செய்திகள்

ஹனோய்: ஒரு திட்டம் குறித்துப் பொதுமக்களிடையே அதிருப்தி இருப்பதை வியட்னாம் ஒப்புக்கொண்டுள்ளது.

பொதுவாக வியட்னாம், பொதுமக்களிடையே அதிருப்தி இருப்பதை ஒப்புக்கொள்வது அரிதாகும். தலைநகர் ஹனோயில் திட்டமிடப்பட்டுள்ள புதுப்பிப்புப் பணி ஒன்றின் தொடர்பிலான கருத்தாய்வில் பங்கேற்றவர்களில் கால்பங்குக்கும் மேலானவர்கள் ஆதரவளிக்கவில்லை.

பொதுவாக எதிர்ப்பு அதிகம் இருக்காது

கம்யூனிஸ்ட் நாடான வியட்னாம், மக்கள் தனது கருத்துக்கு ஒத்துப்போகாததைப் பொதுவாக அதிகம் சகித்துக்கொள்ளாது. எனினும், ஹனோய் சிவப்பு ஆறு, அந்நகரின் வரலாற்றுக்குச் சிறப்புமிக்க மையப் பகுதி ஏரியின் சுற்றுப் பகுதி ஆகியவற்றைப் புதுப்பிப்பதற்கான பல பில்லியன் டாலர் மதிப்புகொண்ட திட்டத்துக்கு செப்டம்பர் மாதம் முழுவதும் பொதுமக்களின் கருத்துகளைச் சேகரித்தது.

அந்த 100-ஆண்டு பெருந்திட்டத்தின்கீழ் ஆயிரக்கணக்கான வீடுகள் இடிக்கப்பட்டுவிட்டன அல்லது இடிப்பதற்காக அடையாளம் காணப்பட்டுள்ளன. அத்திட்டத்துக்குக் கடந்த மே மாதம் ஒப்புதல் வழங்கப்பட்டது.

அதன்கீழ் உயர்தர குடியிருப்புக் கட்டடங்கள், பூங்காக்கள் உள்ளிட்டவற்றைக் கட்டத் திட்டமிடப்பட்டுள்ளது.

ஹனோயில் வசிப்போர் வாக்களிக்கப் பல வாரங்கள் அவகாசம் வழங்கப்பட்டது. அந்த வாக்களிப்பின் முடிவுகளை வியட்னாமிய அதிபர் தோ லாம் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 27) அறிவித்தார் என்று அந்நாட்டு அரசாங்கத்துக்குச் சொந்தமான ஊடகம் தெரிவித்தது.

கருத்தாய்வு முடிவுகள்

ஏரித் திட்டத்துக்கு 92 விழுக்காட்டினர் சாதகமாக வாக்களித்தனர். அதேவேளை, 71.8 விழுக்காட்டினர் சிவப்பு ஆற்றுத் திட்டத்துக்கு ஆதரவளித்திருந்தனர். அப்படியென்றால் கால்பங்குக்கும் மேலானவர்கள் அதற்கு ஆதரவளிக்கவில்லை என்று கணிக்கப்பட்டது.

“பெரும்பாலான குடிமக்கள் ஆதரவளித்தாலும் குறிப்பிட்ட சில அம்சங்களில் மாற்றுக் கருத்துகள் இருக்கின்றன,” என்று தோ லாம் ஹனோய் மக்களிடம் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டது.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

“இது, நீண்டகாலத்தில் தாக்கம் ஏற்படுத்தக்கூடிய திட்டங்களுக்கு சாதாரணம்தான், தேவையும்கூட,” என்றார் அவர்.

எனினும், வியட்னாமில் இப்படி புள்ளிவிவரங்களுடன் அறிவிப்பு இடம்பெறுவது அரிது என்றார் அமெரிக்காவில் செயல்படும் வியட்னாம் விவகார வல்லுநரான, ஒரிகன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த துவோங் வூ. முன்னதாக இதுபோன்ற கருத்தாய்வுகளின் முடிவுகள் அதிகாரிகளிடம் மட்டுதான் வெளியிடப்பட்டன என்று அவர் குறிப்பிட்டார்.

பல மாதங்களாக அதிக சத்தமில்லாமல் எதிர்ப்பு எழுந்ததைத் தொடர்ந்து பொதுமக்களிடம் கருத்தாய்வு நடத்தப்பட்டது. பொதுமக்களுடன் மேலும் பேச்சுவார்த்தை நடத்துமாறு திரு லாம், ஹனோய் அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டார்.