📅 Monday, 17 August 2026 IST | ஆவணி 1, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports August 17, 2026 12:03 AM

IND vs SL: ரிஷப் பண்ட்

IND vs SL: ரிஷப் பண்ட்

IND vs SL: ரிஷப் பண்ட்-ஐ குறை சொல்ல மாட்டேன், அவருடைய அறிவை தான் விமர்சிப்பேன்.. கையிப் தாக்கு

காலே: இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ரிஷப் பந்த் ஆட்டமிழந்த விதம் குறித்து முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் முகமது கைஃப் விமர்சித்துள்ளார். பந்தின் அதிரடி ஆட்ட முறை குறித்து தமக்கு எந்த மாற்றுக்கருத்தும் இல்லை என்றும், ஆனால் அவர் விளையாடிய ஷாட்டில் 'கிரிக்கெட் Common sense இல்லை என்றும் கைஃப் தெரிவித்துள்ளார்.

மற்ற அதிரடி பேட்டர்கள் தங்கள் இயல்பான ஆட்டத்தை மாற்றாமல், சிறந்த கிரிக்கெட் லாஜிக்கை வெளிப்படுத்துகிறார்கள் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ரிஷப் பந்தின் பேட்டிங் முறை குறித்து எப்போதும் விவாதங்கள் எழுவது வழக்கம். இந்திய அணியின் வரலாற்று சிறப்புமிக்க டெஸ்ட் வெற்றிகளுக்கு மிடில் ஆர்டரில் அதிரடியாக விளையாடி பலமுறை அவர் வழிவகுத்துள்ளார்.

இருப்பினும், அவரது அதிரடி ஆட்டம் கை கொடுக்காதபோது அது ஏமாற்றத்தில் முடிகிறது. காலியில் நடைபெற்ற போட்டியில், அவர் 39 (61) ரன்கள் எடுத்து தேவ்தத் படிக்கலுடன் இணைந்து 71 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தார். அந்த நேரத்தில், கேஷார நுவாந்தாவின் பந்துவீச்சில் தேவையில்லாமல் இறங்கி வந்து அடிக்க முயன்று தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

இது குறித்து பேசிய கையிப், "ரிஷப் பந்த் ஆட்டமிழந்த விதம் குறித்து எனக்கு எந்த புகாரும் இல்லை. அவர் எப்போதும் இப்படித்தான் விளையாடுவார். ஆனால், எனது கேள்வி அவரது கிரிக்கெட் பகுத்தறிவு குறித்ததுதான். புதிய பந்து வீசப்பட்ட முதல் ஓவர் அது. அந்த ஓவரில் அவர் மூன்று முறை கிரீஸை விட்டு வெளியேறி அடிக்க முயன்றார்."

"கிரிக்கெட் பகுத்தறிவு என்பது இதுபோன்ற சூழலில் கட் ஷாட் விளையாடுவது அல்லது புதிய பந்தின் தாக்கத்தை எதிர்கொள்ள ஐந்து முதல் ஆறு ஓவர்கள் வரை பொறுமையாக இருப்பதுதான். இதுதான் டெஸ்ட் போட்டியின் பாரம்பரியம். பந்தை போல் அதிரடியாக விளையாடும் மற்ற வீரர்களும் முறையான கிரிக்கெட் பகுத்தறிவைப் பயன்படுத்துகிறார்கள்" என்று அவர் கூறினார்.

"அந்த ஓவரின் முதல் பந்திலேயே அவர் இறங்கி வந்து அடிக்க முயன்றதை பார்த்து நான் ஆச்சரியமடைந்தேன். ஒரு பேட்டர் கொஞ்சம் கணக்கு போட்டு விளையாட வேண்டும். 150 ரன்கள் எடுத்து விளையாடிக் கொண்டிருக்கும் ஒரு பேட்டர் கூட, புதிய பந்து வரும்போது சில பந்துகளை நிதானமாக எதிர்கொள்வார். எனவே, கிரிக்கெட் லாஜிக் மற்றும் சாதுரியத்தில் அவர் மிகவும் பின்தங்கியுள்ளார்" என்று கைஃப் குறிப்பிட்டார்.