இனிமேல் நீ என் மகளே இல்லை.. ரேவதியைத் தலைமுழுகிய சாமுண்டீஸ்வரி.. கார்த்திகை தீபம்
சென்னை: கார்த்தியை அவமானப்படுத்திய விஷயத்தை ரோகிணி ரேவதிக்கு போன் செய்து இங்கு நடந்ததை சொல்ல ரேவதி வருத்தப்படுகிறாள் இதனால் மனவேதனையில் அழும் ரேவதி, சாமுண்டீஸ்வரியை நேரில் சந்தித்து, நாளைக்கு வந்து தேவையான இடத்தில் கையெழுத்து போட்டுக் கொடுத்துவிடுகிறேன் என்று சொல்கிறார். உடனே ரோகிணி என்ன ரேவதி நீயும் அம்மா மாதிரி இப்படி ஒரு முடிவை எடுக்குற என்று சொல்கிறார்.
உடனே ரேவதி, அக்கா நீங்க எல்லாம் அம்மாவிற்காக மாமாவை அசிங்கப்படுத்திட்டீங்க எனக்கு என் மாமா தான் முக்கியம், அம்மா வேண்டாம் என்று நான் முடிவு செய்யல, அம்மா தான் நான் வேண்டாம்னு முடிவு பண்ணிட்டாங்க நான் கையெழுத்து போட்டு கொடுக்க தயார், நாளை காலை 9 மணிக்கு வரேன் என சொல்லிவிட்டு அங்கிருந்து கிளப்பி செல்கிறார்.
கார்த்திகை தீபம்: இன்றைய எபிசோடில், ரேவதியின் முடிவை கேட்டு ஆத்திரப்படும் ராஜராஜன் கடும் கோபமடைகிறார். சாமுண்டீஸ்வரி இப்படி செய்தால் ரேவதி வேறு என்ன முடிவு எடுப்பார்? என்று வருத்தப்படுகிறார். அதே நேரத்தில், குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து எப்படியாவது ரேவதியை தடுக்க வேண்டும் என்று முடிவு செய்கிறார்கள். மறுபக்கம், சந்திரகலா சிவனாண்டியை சந்தித்து, ரேவதி கையெழுத்து போட ஒப்புக்கொண்ட செய்தியை உற்சாகமாக தெரிவிக்கிறார். இதை கேட்ட சிவனாண்டி மிகவும் மகிழ்ச்சியடைந்து, நம்ம திட்டம் ஒவ்வொன்றாக நிறைவேற ஆரம்பிச்சிருக்கு... இனிமேல் எல்லாமே நம்ம பக்கம் தான் என்று நம்பிக்கையுடன் பேசுகிறார்.
தலைமுழுகிய சாமுண்டீஸ்வரி: அடுத்த நாள், சாமுண்டீஸ்வரியை சந்திக்க ரேவதி கிளம்பத் தயாராகிறார். வீட்டில் பாட்டி மட்டும் இருப்பதால் என்ன சொல்லி விட்டு வெளியே போவது என்று குழப்பமடைகிறார். முதலில் பொய் சொல்லிவிட்டு கிளம்பலாம் என நினைக்கிறார். ஆனால் அவரால் பொய் சொல்ல முடியாமல் தவிக்கிறார். கடைசியில் உண்மையை பாட்டியிடம் சொல்லிவிடுகிறார். இதை கேட்ட பாட்டி, ரேவதியை வெளியே செல்லவிடாமல் தடுக்க முயற்சி செய்கிறார். ஆனாலும் ரேவதி தனது முடிவில் உறுதியாக இருந்து அங்கிருந்து கிளம்பி சாமுண்டீஸ்வரி வீட்டிற்கு செல்கிறார். அங்கு சாமுண்டீஸ்வரி தேவையான ஆவணங்களுடன் ரேவதிக்காக காத்திருக்கிறார்.
ரேவதி வீட்டிற்கு வந்ததும், வா ரேவதி எனக்கு தெரியும் நீ இந்த அம்மா தான் முக்கியம்னு வந்துட்டியா என கேட்கிறாள். ஆனால், ரேவதி அவர்களிடம் பேசாமல், அட்வகேட் சார், எனக்கும் இந்த குடும்பத்திற்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை. இதற்கு எனக்கு சம்மதம் என்று கையெழுத்து போடுகிறாள். இதனால் அனைவரும் அதிர்ச்சி அடைய ரேவதி இனிமேல் என் மகளே இல்லை என்று கோவத்தில் ரேவதியை தலைமுழுகுகிறாள் இப்படி பரபரப்பான திருப்பங்களுடன் இன்றைய எபிசோட் நகரவுள்ளது. இனி அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை பார்க்க கார்த்திகை தீபம் சீரியலை பாருங்க.