📅 Saturday, 26 September 2026 IST | புரட்டாசி 10, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business September 25, 2026 10:01 PM

இப்போது சரிந்தாலும் நீண்ட காலத்தில் அள்ளித் தரும் NSE பங்குகள், இனி வரும் நாட்களில் 15% வரை உயரும் என கணிப்பு

இப்போது சரிந்தாலும் நீண்ட காலத்தில் அள்ளித் தரும் NSE பங்குகள், இனி வரும் நாட்களில் 15% வரை உயரும் என கணிப்பு

நேஷனல் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் ஆஃப் இந்தியா லிமிடெட் (NSE) பங்குகள், சந்தையில் அறிமுகமான மறுநாளான வெள்ளிக்கிழமையன்று, லாபப் பதிவு நடவடிக்கைகளால் 1.5 சதவீதத்திற்கும் அதிகமாக சரிந்தன.BSE-யில் இப்பங்கு வர்த்தகத்தின் போது ஒரு பங்கிற்கு குறைந்தபட்சமாக ரூ. 1,790.10 என்ற அளவை எட்டியது. அதாவது பங்கின் விலை 1.53 சதவீத சரிந்துள்ளது. பின்னர் சரிவிலிருந்து சற்று மீண்டு, காலை 11:10 மணியளவில் ஒரு பங்கிற்கு ரூ. 1,806.60 என்ற விலையில் 0.63 சதவீத சரிந்து வர்த்தகமானது.வர்த்தகத்தின் முதல் நாளான வியாழக்கிழமையன்று NSE பங்குகள் கிட்டத்தட்ட 2 சதவீதம் உயர்ந்த நிலையில் நிறைவடைந்தன. இதன் மூலம் பங்குச் சந்தையின் மதிப்பு ரூ. 4.49 லட்சம் கோடியாக உயர்ந்ததுடன், உலகின் முதல் ஏழு பங்குச் சந்தைகளில் ஒன்றாகவும் இது இடம்பிடித்தது.BSE-யில் இப்பங்கு ரூ. 1,800-க்கு பட்டியலிடப்பட்டது; இது வெளியீட்டு விலையான ரூ. 1,785-ஐ விட 0.84 சதவீதம் அதிகமாகும். வர்த்தக அமர்வின் போது, ​​பங்குகள் 5.21 சதவீதம் உயர்ந்து ரூ. 1,878-ஐ எட்டின. இறுதியில் 1.85 சதவீதம் உயர்ந்து ரூ. 1,818-ல் நிறைவடைந்தன.நேற்றைய வர்த்தக முடிவில் NSE-யின் சந்தை மதிப்பு ரூ. 4,49,955 கோடியாக இருந்தது. வெள்ளிக்கிழமையன்று அதன் சந்தை மூலதனம் ரூ. 4,47,145.88 கோடியாக இருந்தது.NSE பங்கு விலை இலக்கு 2026இதற்கிடையில், இப்பங்கின் விலை மேலும் உயரக்கூடும் என்று சந்தை ஆய்வாளர்கள் எதிர்பார்க்கின்றனர். தரகு நிறுவனங்கள் நிர்ணயித்துள்ள இலக்கு விலை , IPO வெளியீட்டு விலையிலிருந்து 15 சதவீதம் வரை லாபம் கிடைக்க வாய்ப்புள்ளதைக் காட்டுகின்றன.நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய பொதுப் பங்கு வெளியீடான (IPO) NSE-இன் ரூ. 22,569 கோடி மதிப்பிலான வெளியீட்டிற்கு, நிறுவன முதலீட்டாளர்களிடமிருந்து கிடைத்த வலுவான வரவேற்பின் காரணமாக, திங்கட்கிழமையன்று நடைபெற்ற ஏலத்தின் இறுதி நாளில் கிட்டத்தட்ட ஆறு மடங்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டன.