Jailer 2 Review: இரண்டாம் பாதியில் சொதப்பிய ஜெயிலர் 2? தாராளமாய் குவிந்த கேமியோக்கள்?
Jailer 2 Review: இரண்டாம் பாதியில் சொதப்பிய ஜெயிலர் 2? தாராளமாய் குவிந்த கேமியோக்கள்? ரஜினி படம் எப்படி?
RajiniKanth Jailer 2 Review: ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் 2 திரைப்படத்தின் இரண்டாம் பாகம், ரசிகர்களையிடையே கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.
RajiniKanth Jailer 2 Review: ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் 2 திரைப்படத்தின் முதல் பாகம் ஏற்படுத்திய எதிர்பார்ப்பை இரண்டாம் பாகம் ஈடுசெய்யவில்லை என ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.
எதிர்பார்ப்பில் ரஜினியின் ஜெயிலர் 2..!
நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் மெகாஹிட் அடித்தது. அனிருத்தின் இசை அதற்கு முக்கிய காரணமாக அமைந்தது. அதன் நீட்சியாக இதே கூட்டணி ஜெயிலர் திரைப்படத்தின் இரண்டாம் பாகம், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இன்று வெளியகியுள்ளது. பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இந்த திரைப்படம், நடப்பாண்டின் தமிழ் சினிமாவின் மிகப்பெரிய படமாக கருதப்படுகிறது. ரஜினி நடிப்பில் கடைசியாக வெளியான கூலி திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையில், ஜெயிலர் 2 மூலம் அவர் கம்பேக் கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. அந்த வகையில் இந்த திரைப்படம் ரசிகர்களை கவந்ததா? என்ற விமர்சனத்தை இங்கே அறியலாம்.
ரசிகர்களை கவர்ந்த ஜெயிலர் 2 முதல் பாதி..!
முதல் பாகம் முடிவடைந்த புள்ளியில் இருந்தே இரண்டாம் பாகத்தின் கதை தொடங்குகிறதாம். நகைச்சுவை, நெல்சனின் ட்ரேட்மார்க் டார்க் காமெடி வசனங்கள், ஆக்ஷன் காட்சிகள், ரஜினியின் எலிவேஷன் சீன்கள் போன்றவை ரசிகர்களை கவர்ந்துள்ளது. குறிப்பாக இடைவேளை காட்சி படத்திற்கு மிகப்பெரிய பலம் என அண்டை மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் அதிகாலை காட்சிகளை பார்த்த ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். வழக்கமாக இரண்டாம் பாகங்கள் தமிழ் சினிமாவில் எடுபடாது என்ற நிலையை, ஜெயிலர் 2 திரைப்படத்தின் முதல் பாதி முறியடித்துள்ளது. ரஜினி ரசிகர்களுக்கு சரியான வேட்டையாக அமையும் என மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். அனிருத் வழக்கம்போல் படத்தை அடுத்த லெவலுக்கு கொண்டு சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.
#Jailer2 - First Half 🔥 Superstar Title Card, Nelson’s Witty Comedies throughout, Mass Bridge Seq & Tea Stall Scene, Interval Block… 💥👌 Highly Engaging. Nelsoooo Veramaari….Hukum🤝
#Jailer2 Solid Commercial 1st Half! Follows a familiar template and starts a bit slow, but once the setup is established, Nelson’s trademark comedy works well along with a few solid Superstar elevation scenes backed by Anirudh’s BGM. Continues right where Part 1 ends and stays entertaining so far.
இரண்டாம் பாதியில் சறுக்கலா?
முதல் பாதி கொடுத்த உற்சாகத்தில் இரண்டாம் பாதியில் அமர்ந்தவர்களுக்கு சற்றே ஏமாற்றமே மிஞ்சியதாக கூறப்படுகிறது. வித்யாபாலன் மற்றும் எஸ்.ஜே. சூர்யா போன்ற வில்லன் கதாபாத்திரங்கள் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை குறிப்பிடுகின்றனர். முதல்பாதியில் சிறப்பாக அமைந்த பொழுதுபோக்கு அம்சங்களில் இருந்து, இரண்டாம் பாதியில் படம் பெரிய அளவில் விலகிவிட்டதாகவும் தெரிவிக்கின்றனர். ரஜினிக்கான மாஸ் காட்சிகள் இருந்தாலும், அவை ரசிகர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தும் அளவிற்கு அமையவில்லை, பல நட்சத்திர நடிகர்களின் கேமியோக்களும் திரைக்கதையை வலுவாக்க உதவவில்லை எனவும் ரசிகர்கள் சமூக வலைதளத்தில் பதிவு செய்து வருகின்றனர்.
#Jailer2 A Familiar Commercial Entertainer With a Solid 1st Half but an Underwhelming 2nd Half! First half works mainly because of Nelson’s trademark comedy, a few solid Superstar elevation scenes, and Anirudh’s BGM. But the writing gets weaker as it goes on, with the SJ Suryah and Vidya Balan villain tracks feeling tiring and impactless, while the film moves away from the entertainment that works best. Rajinikanth’s screen presence still delivers, but even the elevation scenes don’t hit consistently. The cameos also feel more like plot devices than genuine high points and fail to create the same impact as the first film. Entertaining in stretches, but ultimately an average sequel. Rating: 2.5/5
ஜெயிலர் - ஜெயிச்சிட்டார் 🏆 Kalakalapana 1st Hlf & Konjam Kammiyaana 2nd Hlf! #Jailer2
Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.
தலைப்பு செய்திகள்
ஃபோட்டோ கேலரி