📅 Monday, 19 October 2026 IST | ஐப்பசி 2, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema October 19, 2026 02:01 PM

ஜெயிலர் 2 பாக்ஸ் ஆபீஸ்.. எட்டிப்பார்த்த 30 செகண்ட் சீனுக்கு பல கோடியா? விஜய் சேதுபதியின் சம்பளம்

ஜெயிலர் 2 பாக்ஸ் ஆபீஸ்.. எட்டிப்பார்த்த 30 செகண்ட் சீனுக்கு பல கோடியா? விஜய் சேதுபதியின் சம்பளம்

சென்னை: கடந்த வியாழக்கிழமை அன்று 'ஜெயிலர் 2' திரைப்படம் உலகமெங்கும் வெளியாகி வசூலில் சக்கை போடு நடத்தி வருகிறது. படத்தின்ஒவ்வொரு காட்சியும் மாஸ் எ சொல்லும் அளவிற்கு படத்தை ரசிகர்கள் கொண்டாடு வருகின்றன. இந்த படத்தில் காமியோ ரோலில் நடித்த விஜய் சேதுபதியின் சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரான ரஜினி காந்த் தான் சினிமாவில் அறிமுகமாகி 50 ஆண்டுகளை கடந்தும் , தமிழ் சினிமாவின் நம்பர் 1 நடிகராக இருந்து வருகிறார். மூன்று தலைமுறை நடிகர்களை கண்ட பின்னரும் இன்றும் அவர் , தமிழ் சினிமாவில் தனது இடத்தை யாருக்கும் விடாமல் இருக்கிறார்.

ஜெயிலர் 2: ஜெயிலர் திரைப்படத்தின் முதல் பாகம் மிகப்பெரிய வெற்றியை பெற்று வருகிறது. ஜெயிலர் 2 திரைப்படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் ஏராளமான எதிர்பார்ப்புகள் நிலவி வந்தது. அதற்கேற்றார் போல் திரைக்கதையை அமைத்து இயக்குனர் நெல்சன் ரசிகர்களை திருப்திப்படுத்தி இருப்பதால் ரசிகர்கள் குஷியில் உள்ளனர். இதனால் நாளுக்கு நாள் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. ஞாயிறுக்கிழமையான நேற்று மட்டும் மொத்தமாக ரூ48.62 கோடி வசூலை வாரி குவித்தது. இதன் மூலம் இந்த திரைப்படத்தின் மொத்த நிகர வசூல் ரூ192.67 கோடியாக உள்ளது. இதன் மூலம் உலகளவில் இப்படம் ரூ321 கோடி வசூலித்துள்ளது.

விஜய்சேதுபதியின் சம்பளம்: இந்நிலையில் இந்த படத்தில் காமியோ ரோலில் நடித்த விஜய்சேதுபதியின் சம்பளம் பற்றி தகவல் வெளியாகிஉள்ளது. இந்தபடத்தில் அவர் நடிக்க அவர் 11 கோடி ரூபாய் சம்பளமாக பெற்றுள்ளார். படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் எட்டிப்பார்த்து "ரிப்ளே பண்ணுங்க சார்.. காந்தா மேடம் கொஞ்சிக்க போறாங்க" என்று மட்டுமே சொல்லி இருப்பார். அந்த 30 காட்சியில் நடிக்க ரூ11 கோடியா என ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகின்றனர். இருப்பினும், படத்தொகுப்பின் போது நீளக் கட்டுப்பாடு காரணமாக விஜய் சேதுபதி நடித்த பல முக்கியக் காட்சிகள் நீக்கப்பட்டதாகவும், 'ஜெயிலர் 3' பாகத்திற்கான லீட் அமைப்பதற்காகவே இந்த கிளைமாக்ஸ் காட்சி மட்டும் படத்தில் வைக்கப்பட்டுள்ளதாகவும் திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.