📅 Saturday, 03 October 2026 IST | புரட்டாசி 17, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Health October 03, 2026 08:02 AM

ஜி20: உணவு வணிகம் மீது உடன்பாடு, தொழில்துறை கொள்கையில் கருத்து வேறுபாடு

ஜி20: உணவு வணிகம் மீது உடன்பாடு, தொழில்துறை கொள்கையில் கருத்து வேறுபாடு

மில்வாக்கி: தொழில்துறையின் அதிகப்படியான உற்பத்தி, சந்தைச் சுதந்திரத்திற்கு எதிரான கொள்கைகளைக் கட்டுப்படுத்துமாறு அமெரிக்கா விடுத்த கோரிக்கையைச் சில ஜி20 உறுப்பு நாடுகள் நிராகரித்துள்ளதாக அமெரிக்க வணிகப் பிரதிநிதி அலுவலகம் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 2) தெரிவித்துள்ளது.

கொத்தடிமை முறையில் தயாரிக்கப்படும் பொருள்களை விநியோகக் கட்டமைப்பிலிருந்து அகற்குவதற்கான மெக்சிகோ, அர்ஜென்டினா ஆகிய இரு நாடுகள் மட்டுமே கையெழுத்திட்டுள்ளதாக மில்வாக்கியில் நடைபெற்ற ஜி20 வணிக அமைச்சர்கள் கூட்டத்திற்குப் பிறகு வெளியிடப்பட்ட ஜி20 அமெரிக்கத் தலைமையிலான கூட்டு அறிக்கை தெரிவித்தது.

முன்னதாக, கொத்தடிமைத் தடையைச் சரியாக நடைமுறைப்படுத்தவில்லை எனக் கூறி 59 நாடுகள், ஐரோப்பிய ஒன்றியப் பொருள்கள் மீது டிரம்ப் நிர்வாகம் 10 விழுக்காடு முதல் 12.5 விழுக்காடுவரை வரி விதித்துள்ளது.

தொழில்துறை உற்பத்திக் கட்டுப்பாட்டு அறிக்கையை எதிர்த்த நாடுகளின் பெயர்களை அமெரிக்கா குறிப்பிடவில்லை. எனினும், சீனா இத்தகைய கோரிக்கைகளைத் தொடர்ந்து எதிர்த்து வருகிறது. தனது தொழில்துறை கொள்கைகள் மூலம் உற்பத்தி அளவுக்கதிமாக இருப்பதை சீனா மறுத்துள்ளதுடன், மேற்கத்திய நாடுகள் தற்காப்பு வணிக நடவடிக்கைகளை நியாயப்படுத்தவே இப்பிரச்சினையைக் கையில் எடுப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளது.

பெரும்பாலான நாடுகளின் ஆதரவு இருந்தபோதிலும், சில நாடுகளின் தீவிர எதிர்ப்பானது அமெரிக்கத் தலைமைக்குக் கடும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

அதேவேளையில், உணவு வணிகத்தைப் பொருளியல் அல்லது அரசியல் காரணங்களுக்காக ஆயுதமாகப் பயன்படுத்தக்கூடாது என்பதில் அனைத்து ஜி20 நாடுகளும் ஒருமனதாக ஒப்புக்கொண்டு உடன்பாடு கண்டன.