📅 Monday, 21 September 2026 IST | புரட்டாசி 5, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News September 21, 2026 03:03 PM

கேரளாவில் தொடர் கனமழை: நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கில் 5 பேர் உயிரி*ப்பு!

கேரளாவில் தொடர் கனமழை: நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கில் 5 பேர் உயிரி*ப்பு!

கேரளாவில் தொடர் கனமழை: நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கில் 5 பேர் உயிரி*ப்பு!

திருவனந்தபுரம்: கேரளாவில் கனமழை தொடரும் நிலையில், நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக ஐந்து பேர் உயிரி*ந்துள்ளனர். மேலும் ஒருவர் மாயமாகியுள்ளதால் தேடுதல் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மலப்புரம்: நிலம்பூர் - அமரம்பலம் பகுதியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஆற்றின் நீர்மட்டம் திடீரென உயர்ந்ததால், ஆற்றில் இறங்கிய 6 பேர் அடித்துச் செல்லப்பட்டனர். இவர்களில் 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. ஒருவரை தேடும் பணி நடந்து வருகிறது.

இடுக்கி: கனமழையின் போது நிலச்சரிவு ஏற்பட்டு, ஒரு தற்காலிக கொட்டகையின் மீது மண் சரிந்து விழுந்தது. மழையிலிருந்து தப்பிக்க அங்கு ஒதுங்கியிருந்தவர்களில் இருவர் உயிரி*ந்தனர், ஒரு பெண் காயமடைந்தார்.

கோட்டயம்: ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்த போது சாலையில் மண் சரிந்து விழுந்ததில், சென்னையைச் சேர்ந்த சங்கீதா (35) என்ற பெண் பரிதாபமாக உயிரி*ந்தார். அவருடன் வந்த தோழி காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் கனமழை காரணமாக பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம் மற்றும் திருச்சூர் 6 மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய பலத்த காற்று (மணிக்கு 40 கி.மீ வேகத்தில்) வீசக்கூடும். மேலும், அடுத்த 4 நாட்களுக்கு கேரளா முழுவதும் மழை தொடரும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

பரிந்துரைக்கப்பட்ட மாவட்டங்களில் நிலைமையை உன்னிப்பாகக் கவனிக்குமாறு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். பொதுமக்களுக்கு குறுஞ்செய்தி மூலம் எச்சரிக்கைகள் அனுப்பப்பட்டுள்ளதுடன், அவசியமானால் மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றவும் மாவட்ட நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.