📅 Tuesday, 22 September 2026 IST | புரட்டாசி 6, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema September 22, 2026 06:01 PM

கண்டுப்பீங்களா டா?.. டோரதி ஹீரோஸை கலாய்த்துவிட்ட கீர்த்தி சுரேஷ்.. ஃபன்னான டீம்

கண்டுப்பீங்களா டா?.. டோரதி ஹீரோஸை கலாய்த்துவிட்ட கீர்த்தி சுரேஷ்.. ஃபன்னான டீம்

சென்னை: கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் டோரதி திரைப்படம் செப்டம்பர் 25ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. இளையராஜா இசையமைத்திருக்கும் இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், ரிஷிகாந்த், சனந்த் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். சர்வதேச அளவில் பெரிய கவனத்தை ஈர்த்திருக்கும் இப்படம்; தமிழ் ரசிகர்களை ஈர்க்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். அதேசமயம் ரிஷிக்கும், சனந்த்துக்கும் இப்படம் நல்ல அடையாளத்தை பெற்றுக்கொடுத்துள்ளன.

கார்த்திக் சுப்புராஜ் இந்தத் தலைமுறையில் முக்கியமான இயக்குநர்களில் ஒருவராக இருக்கிறார். மணிரத்னத்தின் அணுகுமுறையும், அவருக்குரிய தனி ஸ்டைலும் அவரது படங்களில் மேலோங்கி இருக்கின்றன. இதுவரை அவர் இயக்கிய ஒவ்வொரு படமும் வெவ்வேறு ஜானரை சேர்ந்தது. கடைசியாக எடுத்த ரெட்ரோ கூட அவரது ஸ்டைலில்தான் வந்திருந்தது. ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு அந்தப் படம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

டோரதி கார்த்திக் சுப்புராஜ்: இப்போது அவர் கீர்த்தி சுரேஷ், ரிஷிகாந்த், சனந்த் உள்ளிட்டோரை வைத்து டோரதி படத்தை இயக்கியிருக்கிறார். இளையராஜா இசையமைத்திருக்கிறார். படத்தின் பாடல்களும், இசையும் பெரிய அளவில் ஈர்த்துவிட்டன. இரண்டு பேருக்குமிடையே தொடங்கும் குழந்தை கால நட்பை மையமாக வைத்து இப்படம் உருவாகியிருக்கிறது. மேலும் பெண்ணியம் சார்ந்த விஷயங்களும் இடம்பெறும் என்று தெரிகிறது. ஏற்கனவே இறைவி படத்தில் கார்த்திக் பேசியிருந்த பெண்ணியம் பெரிய அளவில் ஈர்த்தது.

ரிஷிகாந்த், சனந்த்: இப்படத்தில் ஹீரோக்களாக நடித்திருக்கும் ரிஷிகாந்த்தும், சனந்த்தும் நீண்ட காலமாக சினிமாவில் இருக்கிறார்கள். ரிஷியை பொறுத்தவரை கூலி உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். சனந்த்தோ கார்த்திக் சுப்புராஜின் குட் புக்கில் இருப்பவர். பேட்ட, மகான் உள்ளிட்ட திரைப்படங்களில் அடையாளம் தெரியும் அளவுக்கு வந்து போயிருக்கிறார். இருப்பினும் அவர்கள் இரண்டு பேருக்குமே எந்த பிரேக்கும் கிடைக்காமல் இருந்தது. எப்படியாவது திரைத்துறையில் தங்களுக்கான ஒரு இடத்தை பிடித்துவிட வேண்டும் என்பதில் கடுமையாக உழைத்துவருகிறார்கள்.

ட்ரெண்டான இரண்டு பேர்: அவர்கள் இருவரும் இந்தப் படத்தின் மூலம் பயங்கர ட்ரெண்டாகியிருக்கிறார்கள். குறிப்பாக, கல்யாண விருந்து பாடலுக்கு அவர்கள் இருவரும் போட்ட ஸ்ட்டெப் ரீல்ஸாக அனைவரது பார்வையிலும் பட்டிருக்கிறது. அவர்கள் ப்ரோமோஷனுக்கு எங்கே சென்றாலும் அந்த ட்ரேட் மார்க் மூவ்மென்ட்டை போட சொல்லி அன்புடன் கோரிக்கைகள் வருகின்றன. அவர்களும் அதை செய்கிறார்கள். மேலும், ரிஷிகாந்த்துக்கு கூடுதலாக மொத ராத்திரி படமும் ஹிட். சமீபத்தில்தான் ஓடிடியில் வெளியாகி; பல இளம் பெண்களுக்கு க்ரஷ் லிஸ்ட்டில் சேர்ந்திருக்கிறார்.

கீர்த்தி சுரேஷ் கலாய்: இந்தப் படமும் ரிஷிகாந்த்துக்கும், சனந்த்துக்கும் திருப்புமுனையை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் மதுரையில் நடந்த டோரதி ப்ரோமோஷனில் அவர்கள் குறித்து பேசிய கீர்த்தி சுரேஷ், "நான் இந்தப் படத்தில் சில பல நாட்கள் மட்டுமே வேலை செய்தேன். இருந்தாலும் ரிஷிகாந்த்துடனும், சனந்த்துடனும் ரொம்ப வருடங்கள் பழகிய மாதிரி ஒரு உணர்வு இருக்கிறது.

மிக அழகான நட்பு இந்தப் படத்தின் மூலம் கிடைத்திருக்கிறது. இரண்டு பேருமே பயங்கரமாக நடித்திருக்கிறார்கள். நீங்கள் எல்லோரும் அதை பார்ப்பதற்கு நான் காத்திருக்கிறேன். இனிமேல் இவர்கள் இரண்டு பேரையும் பிடிக்க முடியுமா என தெரியவில்லை" என்றார். மேலும் அவர்களை நோக்கி, 'கண்டுப்பீங்களா டா' என்ற கேள்வியையும் ஜாலியாக முன்வைத்து கலாய்த்தார். அதற்கு அவர்கள் இரண்டு பேரும் தன்னடகத்தோடு ரியாக்ட் செய்துகொண்டார்கள்.