📅 Thursday, 03 September 2026 IST | ஆவணி 18, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics September 02, 2026 11:04 PM

கொள்கைகள் அற்ற கட்சிகள் வரும், போகும்: ஸ்டாலின்

கொள்கைகள் அற்ற கட்சிகள் வரும், போகும்: ஸ்டாலின்

சென்னை: கொள்கை அற்ற கட்டமைப்பு அற்ற கட்சிகள் வரும் போகும். மின்மினி பூச்சிகள் நிரந்தரம் கிடையாது என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

ஸ்டாலின் தலைமையில், திமுகவின் மறுசீரமைப்பு பிரதிநிதிகள் கூட்டம் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக நடந்தது.

இக்கூட்டத்தில் ஸ்டாலின் பேசியதாவது: நாட்டிலேயே முதன்முதலில் ஆட்சியைப் பிடித்த மாநில கட்சி, சாதனைகள்பல படைத்த கட்சி எனு பெருமை திமுகவிற்கு இருக்கிறது. அதற்கு காரணம், அப்படியே தேங்கி விடாமல் காலத்திற்கு ஏற்ப நாம் அப்டேட், ஆகி அப்கிரேட் ஆவது தான்.

மாற்றங்கள் நம்மிடம் இருந்து தான் துவங்க வேண்டும் என்று சொல்லி திமுக 2.0 விற்கானபயணத்தை இப்போது நாம் துவங்கியிருக்கிறோம்.சட்டசபை தேர்தலில் நமக்கு ஏற்பட்டபின்னடைவுகளுக்குக் காரணம் என்ன என்று ஆராய்ந்து வெற்றிப் பாதைக்கு நாம் திரும்ப வேண்டும் என்று பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்துக் கொண்டு இருக்கிறோம்.

முதலில் கள ஆய்வை அனுப்பி நிர்வாகிகளிடம் கருத்து கேட்டோம்.

ஆன்லைனில் தொண்டர்களிடம் கருத்து கேட்டோம். அதில் வந்த கருத்துகள் அடிப்படையில் கட்சியின் கட்டமைப்பின் மேறகொள்ளப்பட வேண்டிய சீரமைப்புகளை பரிந்துரை செய்ய கட்சி மறுசீரமைப்புக் குழுவை அமைத்தோம். அந்தக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் செயற்குழுவில் பல்வேறு தீர்மானங்களை கொண்டு வந்தோம்.

கட்சி மறுசீரமைப்புக்காக நியமிக்கப்பட்டுள்ள நீங்கள் என்னுடைய கண்கள் ஆகவும், காதுகள் ஆகவும் மாவட்டங்களுக்கு சென்று எந்தவித பாகுபாடும் பார்க்காமல் எந்தவித அழுத்தங்களுக்கும் அடிபணியாமல் கொடுக்கப்பட்டு இருக்கின்ற பணிகளை சரியாக செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

அடித்தளம் வலிமையாக இருந்தால் தான் கட்டடம் உறுதியாக இருக்கும். வேர்கள் வலிமையாக இருந்தால் தான் ஆலமரம் உறுதியாக நிற்கும். அதுபோல் நம்முடைய கட்சி கட்டமைப்பு நம்மை தாங்கி நிற்கும். அந்த ஆணிவேரை பலப்படுத்தும் பெரும் பொறுப்பு உங்கள் கைகளில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதனை உணர்ந்து செயல்படுங்கள். கொள்கை அற்ற கட்டமைப்பு அற்ற கட்சிகள் வரும் போகும். மின்மினி பூச்சிகள் நிரந்தரம் கிடையாது. சூரியன் தான் நிரந்தரம். நிலைத்து நிற்கும். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.