📅 Saturday, 19 September 2026 IST | புரட்டாசி 3, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu September 19, 2026 02:33 AM

கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ்.பாபு உடல்நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை தகவல்

கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ்.பாபு உடல்நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை தகவல்

கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ்.பாபு | கோப்புப் படம்

சென்னை: கொளத்தூர் தொகுதி தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு உடல்நிலையில் முன்னேற்றம் உள்ளதாக எம்ஜிஎம் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மருத்துவமனை நிர்வாகம் இன்று மாலை வெளியிட்ட அறிக்கையில், ‘வி.எஸ்.பாபு சுவாசக் கோளாறு பிரச்சினைக்காக சிகிச்சை பெற்று வருகிறார். பல்வேறு துறை மருத்துவ நிபுணர்கள் அடங்கிய குழுவினர் அவரைக் கண்காணித்து வருகின்றனர். சிகிச்சைக்கு ஒத்துழைப்பு அளித்து வருகிறார். அவரது உடல்நிலையில் முன்னேற்றம் உள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை கொளத்தூர் தொகுதி தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு. கடந்த ஒரு மாதமாக நடந்து வந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் பங்கேற்று வந்த இவருக்கு கடந்த 9-ம் தேதி இரவு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து, சென்னை அமைந்தகரையில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு மருத்துவர்கள் குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.